பிக் பாஸ் சீசன் 7 தொடங்கி தற்போது 70 நாட்களை கடந்து இருக்கிறது. இன்னும் 30 நாட்களே மீதம் இருக்கும் நிலையில் பிக் பாஸ் சுவாரஸ்யமாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு தற்போது கமலஹாசன் ஹவுஸ் மேட்ஸிடம் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார். அவர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் திணறிக் கொண்டிருக்கின்றனர். 23 போட்டியாளருடன் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 தற்போது 13 போட்டியாளர்களாக சுருங்கி இருக்கிறது. ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக மக்கள் பலரும் ஹாட்ஸ்டாரில் வாக்களிக்க முடியாததால் இந்த வாரம் எலிமினேஷனை ரத்து செய்து இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் விசித்ரா, தினேஷ், அர்ச்சனா, மணி, நிக்சன் என நான்கு பேர் நாமினேட் ஆகியிருந்தனர். இதில் நிக்சன் கடைசி இடத்தை பிடித்திருந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் ரத்து செய்யப்பட்டதால் அவர் எலிமினேஷனில் இருந்து தப்பி இருக்கிறார். இருப்பினும் நேற்று விசித்ரா முதல் நபராக காப்பாற்றப்பட்ட நிலையில், இன்று என்ன நடக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்று காலை வெளியான ப்ரோமோவில், “ஒரு டாஸ்கை கூட உருப்படியாக செய்வதில்லை, அடுத்தவரை மதிப்பதில்லை, மக்கள் மட்டும் உங்களை ஏன் மதிக்க வேண்டும்? இந்த வீடு வன்ம குடோனாக மாறி இருக்கிறது” என்று சொல்லி கமல் ஹவுஸ் மேட்ஸை வெளுத்து வாங்கி இருந்தார்.

இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், “உங்கள் வெற்றிக்கு தடையாக இருக்கும் நபர் யார்?” என்ற கேள்வியை கமலஹாசன் எழுப்புகிறார். அப்போது பலரும் அர்ச்சனா மற்றும் தினேஷின் பெயரை குறிப்பிடுகின்றனர். ஒருவரை தூண்டிவிட்டு அவரது கோபத்தில் விளையாடும் அர்ச்சனா மற்றும் தினேஷ் இருவரும் எங்கள் வெற்றிக்கு தடையாக இருப்பார்கள் என்று கூறுகின்றனர். இதனால் அர்ச்சனாவும் தினேஷும் பதில் பேச முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television