பிக் பாஸ் சீசன் 7ன் இன்றைக்கான கடைசி ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பூர்ணிமாவை தான் மிகவும் காயப்படுத்தி விட்டதாகவும், மன்னித்துவிடுமாறும் கூறி விஷ்ணு கண்கலங்கி அழுகிறார். இதனால் பூர்ணிமாவும் என்ன செய்வது என்று தெரியாமல் மனம் உடைந்து அமர்ந்திருக்கிறார். அந்த சோகமான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. 71 நாட்களைக் கடந்து பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதிக்கட்டங்களை நோக்கி நடந்து வருகிறது. இதில் சுவாரஸ்யம் இல்லை, போட்டியாளர்கள் வன்மத்தை மட்டுமே கக்குவதாக நிகழ்ச்சிகள் தொகுப்பாளராக இருக்கும் கமலஹாசனே கண்டனங்களை தெரிவித்து இருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இரண்டு நாட்களாக பிக் பாஸ் வீட்டில் சண்டை, சச்சரவு அதிகமாக இருக்கிறது. போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் மிக மோசமாக வார்த்தைகளால் தாக்கிக் கொண்டு வருகின்றனர். குறிப்பாக டாஸ்க் ஒன்றின் போது பூர்ணிமாவின் திருமணம் பற்றி விஷ்ணு பேசியதை எல்லாம் விஜய் வர்மா போட்டு உடைக்க, பூர்ணிமா மிகுந்த சோகத்தில் ஆழ்கிறார். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பூர்ணிமா விஷ்ணுவிடம், “நீங்கள் தினேஷ் உடன் சேர்ந்து கொண்டு எப்படி எல்லாம் பேசினீர்கள் என்பதை எனக்கு தெரியும் என்று கூறுகிறார். நீங்கள் வெளியில் சென்றால் என்னிடம் பேசுவீர்களா கூட என்பது கூட எனக்கு தெரியவில்லை” என்று கூற, நான் செய்தது தவறுதான் என்னை மன்னித்துவிடு சாரி என்று சொல்லிவிட்டு விஷ்ணு கண்கலங்கி எழுந்து செல்கிறார்.
பின்னர் அவர் கட்டிலில் சென்று படுத்து அழுது கொண்டிருக்கிறார். அப்போது பூர்ணிமா என்ன செய்வது என்று தெரியாமல் அங்கேயே அமர்ந்திருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television