மீனா முகத்தில் சூடான காபியை ஊற்றிய விஜயா.! சிறகடிக்க ஆசை ப்ரோமோ.!

சிறகடிக்க சீரியலின் இன்று புதிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் காபி கொண்டு வந்து கொடுக்கும் மீனா முகத்தில் அந்த காபியை வீசி இருக்கிறார் விஜயா. இதனால் பரபரப்பு எழுந்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க சீரியல் தற்போது பல விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. ஒளிபரப்பாகத் தொடங்கிய சில நாட்களிலேயே டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்த அசத்தியிருந்தது இந்த சீரியல். இதில் கதாநாயகியாக கோமதி பிரியா மீனா என்கிற கதாபாத்திரத்திலும், முத்து என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் வசந்தும் நடித்து வருகின்றனர். இந்த கதை குறித்து பார்த்தோம் என்றால் ரவுடியாக இருக்கும் முத்து ஏழைப் பெண்ணாக இருக்கும் மீனாவை திருமணம் செய்து கொள்கிறார். இந்த திருமணத்தில் முத்துவின் தாயார் விஜயாவுக்கு துளியும் விருப்பமில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீனா முகத்தில் சூடான காபியை ஊற்றிய விஜயா.! சிறகடிக்க ஆசை ப்ரோமோ.! 1

விளம்பரம்

குடித்துவிட்டு ரவுடித்தனம் செய்வதால் விஜயாவுக்கு சுத்தமாக முத்துவை பிடிக்காது. மேலும் மீனாவும் ஏழை என்பதால் அவருக்கு இருவரையும் சுத்தமாக பிடிப்பதில்லை. இந்த நிலையில் தனது மூத்த மகன் மனோஜ்க்கு பணக்கார பெண்ணான ரோகிணியை திருமணம் செய்து வைத்து விட்டதாக அவர் சந்தோஷத்தில் இருக்கிறார். ஆனால் உண்மையில் ரோகிணி மிகப்பெரிய பணக்காரர் எல்லாம் ஒன்று கிடையாது. அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருக்கும் விஷயத்தை மறைத்து மனோஜையும் விஜயாவையும் ஏமாற்றி அவர் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில் இன்று ஒரு ப்ரோமோ வெளியாக இருக்கிறது. அதில் ரோகினியும் விஜயாவும் இணைந்து மாடியில் யோகா செய்து கொண்டிருக்கின்றனர்.

தொடர்புடையவை  வா சித்தி ஒரு டான்ஸ் போடலாம்.! சித்தியுடன் சேர்ந்து செம்ம Cute ஆக ஆடிய அர்ச்சனா மகள் சாரா.!

மீனா முகத்தில் சூடான காபியை ஊற்றிய விஜயா.! சிறகடிக்க ஆசை ப்ரோமோ.! 3

விளம்பரம்

அப்போது மீனா அவர்களுக்கு காபியை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறார். காபி நன்றாக இல்லை என்று சொல்லி விஜயா மீனாவின் முகத்தில் காப்பியை வீசி அடிக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இதை பார்த்த பலரும் விஜயா கொஞ்ச நாளாக ஓவராக ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார் என்று அவரை விமர்சித்து வருகின்றனர். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment