ஐஷு பற்றி நிக்சன் கூறியதை சபையில் போட்டு உடைத்த மாயா.! செம்ம கடுப்பில் நிக்சன்.!

வெளியிட்டது

பிக் பாஸ் சீசன் 7 தொடங்கி இன்றுடன் 75 நாட்கள் முடிவடைந்திருக்கிறது. 76வது நாளில் அடியெடுத்து வைக்கும் பிக் பாஸின் இன்றைய ப்ரோமோக்கள் ஒன்றன் ஒன்றாக வெளியாகி வருகிறது. அதில் காலை பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி இருந்தார். இந்த நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஒருவரை பற்றி ஒருவர் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டு வருகின்றனர். அப்போது மாயா ஐஷு மற்றும் நிக்சனின் கதை குறித்து மீண்டும் பேசத் தொடங்குகிறார். இதனால் நிக்சன் மாயாவிடம் கடுப்பாகி, “என்னுடைய தனிப்பட்ட கதையை நீங்கள் எதற்கு இழுக்கிறீர்கள்??” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஐஷு பற்றி நிக்சன் கூறியதை சபையில் போட்டு உடைத்த மாயா.! செம்ம கடுப்பில் நிக்சன்.! 1

பிக் பாஸ் சீசன் 7 முடிவதற்கு இன்னும் சில நாட்களே மீதம் இருக்கிறது. நேற்று அனன்யாவை மிட் வீக் எலிமினேஷன் என்கிற பெயரில் எதிர்பாராத விதமாக வெளியேற்றி இருந்தனர். இதனால் மொத்தம் 12 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இந்த வார இறுதியில் இரண்டு வெளியேற்றம் இருக்குமா? அல்லது மூன்று வெளியேற்றம் இருக்குமா? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. இந்த வாரம் நாமினேஷனில் தினேஷ், அர்ச்சனா, விஷ்ணு, கூல் சுரேஷ், அனன்யா மற்றும் நிக்சன் ஆகியோர் சிக்கி இருந்தனர். இதில் அனன்யா வெளியேறியதால் நிக்சன் அல்லது கூல் சுரேஷ் இருவரில் ஒருவர்தான் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் 75 நாட்களை முன்னிட்டு வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஒருவரை பற்றி ஒருவர் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மாயா எழுந்து ஐஷுவும், நிக்சனும் என்னிடம் ஒரு நாள் இரவு பேசிக்கொண்டிருந்தனர் என்று கூற, கடுப்பான நிக்சன் நான் பேசியதை எதற்கு இங்கு வந்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்