பிக் பாஸ் சீசன் 7ன் இன்றைக்கான கடைசி ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. 75வது நாளை முன்னிட்டு தற்போது ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் மற்ற ஹவுஸ் மேட்ஸ் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது தனது மனைவி குறித்து தினேஷ் சூசகமாக பேசிக் கொண்டிருக்கிறார். அவருடைய பேச்சை பலரும் சோகத்துடன் அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கின்றனர். “இந்த சீசனை விட்டு வெளியில் சென்றால் தனக்கு வாழ்க்கை மாறும்” என்று தினேஷ் கூறிக் கொண்டிருக்கிறார். அவருடைய நெகிழ்ச்சியான பேச்சு பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் வெளியிலோ ரட்சிதாவின் பதிவுகள் தொடர்ந்து தினேஷுடன் சேர வாய்ப்பில்லை என்பது போலவே இருந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சின்னத்திரையில் காதல் ஜோடிகளாகவும், கணவன் மனைவிகளாகவும் வலம் வந்து கொண்டிருந்தவர்கள் தான் ரட்சிதா மகாலட்சுமி மற்றும் தினேஷ் தம்பதிகள். இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் ரட்சிதாவிற்கு பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீசனில் இருந்து வெளியேறிய பின்னர், தினேஷும் ரட்சிதாவும் இணைந்து வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவே இல்லை. தற்போது தினேஷிற்கு பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் இந்த சீசனின் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.
வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்த அவர் 75 நாட்களை நிறைவு செய்து இருக்கிறார். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், “தனக்கும் சீசன் 6க்கும் ஒரு நெருக்கம் இருக்கிறது. சீசன் 6 குறித்து பேசினாலே தான் மிகவும் சோர்வாக ஆகிவிடுவேன், இந்த சீசனை விட்டு வெளியேறும் போது தனக்கு ஒரு நல்ல வாழ்க்கை காத்திருக்கும்” என்று சொல்லி அவர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். ஆனால் வெளியில் ரட்சிதாவின் சமூக வலைதளப் பதிவுகள் இனி தினேஷுடன் சேர வாய்ப்பே இல்லை என்பது போல தான் இருந்து வருகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Disney + Hotstar Tamil