விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இத்தனை நாட்களாக ஒற்றுமையாக இருந்து வந்த விசித்ரா மற்றும் மாயா இடையே தற்போது சண்டை எழுந்துள்ளது. “மாயா – பூர்ணிமா இருவரையும் ஒன்றாக ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பினால் அவர்கள் வேறு யாருடனும் பேசாமல் அவர்கள் இருவர் மட்டுமே பேசிக் கொண்டிருப்பார்கள்” என்று விசித்ரா கூறியதால் மாயாவிற்கு கோபம் வருகிறது. அவர் விசித்திராவை பார்த்து காட்டமாக சில கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறார். நேற்றையை எபிசோடில் எங்களுக்கு சகிப்புத்தன்மை நிறைய இருக்கிறது என்று பேசிவிட்டு இன்றைக்கு சண்டையை தொடங்கி இருக்கின்றனர் போட்டியாளர்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவில் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பும் 6 பேரை பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரும் பேசி தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்க வேண்டும் என்று பிக் பாஸ் கூறுகிறார். எனவே மாயா, பூர்ணிமா, விஜய், தினேஷ், அர்ச்சனா, நிக்சன் என்று ஆறு பேரை ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தேர்ந்தெடுக்கின்றனர். அப்போது விசித்ரா குறுக்கிட்டு மாயா மற்றும் பூர்ணிமாவை ஒன்றாக போட்டால் அவர்கள் இருவரும் தான் பேசிக் கொண்டிருப்பார்கள். மற்ற யாருடனும் பேச மாட்டார்கள் என்று கூறுகிறார். இதனால் கடுப்பான மாயா, “எங்களை ஒன்றாக போடுவதால் உங்கள் கேம் எதுவும் பாதிக்கிறதா?” என்று கோபத்துடன் கேட்கிறார்.
அதற்கு பதில் அளிக்கும் விசித்ரா, “நீங்கள் இருவரும் ஒன்றாக இணைந்து விட்டால் எங்களுடன் பேசவே மாட்டீர்கள், அதற்காகத்தான் அப்படி சொன்னேன்” என்று பதில் அளிக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television