பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைக்கான ப்ரோமோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி இருக்கிறது. அதில் உள்ளே வந்த நிக்சனின் தந்தை வீட்டிற்குள் வந்துள்ளார். உள்ளே வந்த அவர், நிக்சனை கலாய்த்து தள்ளியிருக்கிறார். “அடிச்சி திருத்திடலாம்ன்னு நினைச்ச அவனை, ஆப்பு வச்சே திருத்திட்டீங்க” என மற்ற ஹவுஸ்மேட்ஸிடம் அவர் கூறிக் கொண்டிருக்கிறார்ர. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 7 தொடங்கி தற்போது 80 நாட்களை நிறைவு செய்து இருக்கிறது. இன்னும் 20 நாட்களே மீதம் இருப்பதால் பரபரப்பான பல திருப்பங்கள் நடந்து வருகிறது. பொம்மை ஃபேக்டரி, ஸ்வீட் ஃபேக்டரி, சொர்கம் – நரகம் போன்ற டாஸ்க்குகள் இல்லாமல், சுவாரஸ்யமே இல்லாமல் இந்த சீசன் நடந்து முடிய இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த வாரம் போட்டியாளர்களின் வீட்டில் இருந்து அவரது உறவினர்கள் வரும் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றது. நேற்றைய தினம் பூர்ணிமாவின் தாயார், விஜய் வர்மாவின் தாயார், சரவண விக்ரமின் பெற்றோர்கள், அர்ச்சனாவின் பெற்றோர்கள் என்று நான்கு போட்டியாளர்களின் பெற்றோர்கள் வருகை தந்திருக்கின்றனர். இன்றைய தினம் நிக்சனின் தந்தை மற்றும் விஷ்ணுவின் தங்கை ஆகியோர் வருகை தந்திருக்கின்றனர். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் வீட்டிற்கு உள்ளே வந்த நிக்சனின் தந்தை நிக்சனை கலாய்த்து தள்ளுகிறார். “இவனை அடித்தே திருத்தி விடலாம் என்று நான் நினைத்திருக்கிறேன். ஆனால் நீங்கள் அனைவரும் ஆப்பு வைத்து அவனை திருத்தி இருக்கிறீர்கள்” என்று சொல்லி கலாய்த்து தள்ளினார்.
இங்கு நாய் குரைத்த உடனேயே எழுந்து விடுகிறான், ஆனால் வீட்டில் நாய் போல் நாம் குரைத்தாலும் அவன் எழுந்திருக்கிறதே கிடையாது என்று சொல்லி நிக்சனை பங்கமாக கலாய்த்து தள்ளுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video.!
YouTube Video Embed Code Credits: Vijay Television