பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் விஷ்ணுவின் தங்கை பூர்ணிமா பற்றி விஷ்ணுவிடம் கூறிக் கொண்டிருக்கிறார். பூர்ணிமாவிடம் நெருங்கி செல்ல வேண்டாம் என்று விஷ்ணுவிற்கு அவரது தங்கை அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 7 தொடங்கி தற்போது 80 நாட்களை நிறைவு செய்து இருக்கிறது. இன்னும் 20 நாட்களே மீதம் இருப்பதால் பரபரப்பான பல திருப்பங்கள் நடந்து வருகிறது. பொம்மை ஃபேக்டரி, ஸ்வீட் ஃபேக்டரி, சொர்கம் – நரகம் போன்ற டாஸ்க்குகள் இல்லாமல், சுவாரஸ்யமே இல்லாமல் இந்த சீசன் நடந்து முடிய இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த வாரம் போட்டியாளர்களின் வீட்டில் இருந்து அவரது உறவினர்கள் வரும் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றது. நேற்றைய தினம் பூர்ணிமாவின் தாயார், விஜய் வர்மாவின் தாயார், சரவண விக்ரமின் பெற்றோர்கள், அர்ச்சனாவின் பெற்றோர்கள் என்று நான்கு போட்டியாளர்களின் பெற்றோர்கள் வருகை தந்திருக்கின்றனர். இன்றைய தினம் நிக்சனின் தந்தை மற்றும் விஷ்ணுவின் தங்கை ஆகியோர் வருகை தந்திருக்கின்றனர். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் விஷ்ணுவின் தங்கை விஷ்ணுவை அமர வைத்து அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறார். அவர் கூறும் பொழுது யாரிடமும் மிகவும் நெருங்கி பழக வேண்டாம் என்று விஷ்ணுவிற்கு மறைமுகமாக பூர்ணிமா பற்றி கூறிக் கொண்டிருக்கிறார்.

மேலும் அவர், யாரிடமும் நெருங்கி பழகாதே, குறிப்பாக பூர்ணிமாவிடம் நெருங்கி பழக வேண்டாம், மாயா – பூர்ணிமா இருவரின் நட்பு பார்க்க அழகாக இருக்கிறது. ஆனால் அதற்குள் நீ சென்று விடாதே என்று சொல்லி விஷ்ணுவை எச்சரிக்கை செய்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video.!
YouTube Video Embed Code Credits: Vijay Television