விசித்ரா பற்றி தொடர்ந்து புறணி பேசும் தினேஷ்.? விசித்ரா மீது இவ்வளவு வன்மம் ஏன்.? அதிருப்தியில் ரசிகர்கள்

வெளியிட்டது

பிக் பாஸ் சீசன் 7 தொடங்கி இன்றுடன் 86 நாட்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில் இன்றைக்கான கடைசி ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது.. அதில் வழக்கம் போல தினேஷ் விஷ்ணுவை அருகில் அமர வைத்துக்கொண்டு விசித்ரா குறித்து புறணி பேசிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் தினேஷ் ஏன் இப்படி ஆகிவிட்டார்? என்று தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் சீசன் 7 – 23 போட்டியாளர்களுடன் தொடங்கி சுமார் 86 நாட்கள் நிறைவடைந்து விட்டது. தற்போது டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்குகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று காலை வெளியான ப்ரோமோவில் கோல்டன் முயல் ஒன்றை வைத்து டிக்கெட் டூ ஃபினாலே முதல் டாஸ்கை கொடுத்திருக்கின்றனர். தொடர்ந்து 15 டாஸ்க்குகள் அடுத்தடுத்து வர இருப்பதாக தெரிகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விசித்ரா பற்றி தொடர்ந்து புறணி பேசும் தினேஷ்.? விசித்ரா மீது இவ்வளவு வன்மம் ஏன்.? அதிருப்தியில் ரசிகர்கள் 1

இந்த முதல் டாஸ்க்கில் தங்க நிற முயல் ஒன்றை வைத்து கோட்டை போல் கட்ட வேண்டும். அந்தக் கோட்டையை நடுவர்களாக இருக்கும் அர்ச்சனா மற்றும் விஜய் வர்மா ஆகியோர் தேர்ந்தெடுக்கும் நபர்கள் கலைத்து முயலை அபகரித்துக் கொண்டு தங்கள் இடங்களில் சென்று நிற்க வேண்டும். அப்படி பஸ்ஸர் அடிப்பதற்குள் யார் நிற்கிறார்களோ? அவர்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதில் விசித்ரா தினேஷ் மற்றும் ரவீனா ஆகிய மூவரும் தோற்று இருக்கின்றனர். அதிக முயல்களை கைப்பற்றியது யார்? என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் தினேஷ் மற்றும் விஷ்ணு இருவரும் அமர்ந்து விசித்ரா பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்.

 

அப்போது தினேஷ் விஷ்ணுவிடம், “விசித்ரா இந்த வார்த்தை கடந்து விட்டால் அவர் சிம்பதியால் ஜெயித்து விடுவார். நாமினேஷனில் அழுவது எல்லாம் ஸ்கோர் செய்யும் வேலை. கேமரா முன்னாடி அழுவதெல்லாம் செயற்கையானது. இயற்கையாக அழுவது கிடையாது. இதற்கு பெயர் தான் மைக்ரோ ஸ்டாம்ப்பிங்” என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்