பிக் பாஸ் சீசன் 7 தற்போது இறுதி கட்டங்களை நெருங்கி இருக்கிறது. இன்றுடன் நிகழ்ச்சி முடிவடையும் நிலையில் நாளை மறுநாள் இறுதிச்சுற்று நடைபெற இருக்கிறது இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார்கள்? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களையே எழுந்திருக்கிறது. முந்தைய சீசன்கள் போல் இல்லாமல் எந்த கடுமையான போட்டிகளோ, சுவாரஸ்யமான டாஸ்க்குகளோ, இரவு பகலாக அமர்ந்திருக்கும் டாஸ்க்குகள் என எதுவுமே இல்லாமல் பிக் பாஸ் சீசன் 7 நிறைவடையே இருக்கிறது. முந்தைய சீசன்களில் அரண்மனை டாஸ்க், சொர்க்கம் நரகம், பெட்டியை பாதுகாப்பது, முட்டையை பாதுகாப்பது, இரவு முழுவதும் சைக்கிள் ஓட்டுவது என்று மிகக் கடுமையான டாஸ்க்குகள் வைக்கப்பட்டு தான் இறுதிப் போட்டிக்கு போட்டியாளர்கள் செல்வது வழக்கம்.

ஆனால் இந்த முறை அது போன்ற எந்த ஒரு டாஸ்க்கும் வைக்கப்படாமல் மிக எளிமையான டாஸ்க்குகள் வைக்கப்பட்டு இந்த சீசன் முடிவடையை இருக்கிறது. பெரும்பாலும் போட்டியாளர்கள் ஆங்காங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதும், அடுப்பங்கறையில் நின்று உரையாடிக் கொண்டிருப்பதும், பின்னர் சண்டை போடுவதும் என இதை மட்டுமே லைவில் பிரதானமாக காட்டிக் கொண்டிருந்தனர். அதனால் இந்த சீசனில் வெற்றியாளராக யாருக்கும் தகுதி இல்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இருந்தபோதிலும் யாராவது ஒருவர் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்கிற கட்டாயம் இருப்பதால் இந்த கோப்பை யாருக்கு செல்ல போகிறது? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.
டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கை வென்று இறுதிப் போட்டிக்கு முதல் ஆளாக தேர்வாகியிருந்தவர் விஷ்ணு. அவருடன் சேர்த்து அர்ச்சனா, தினேஷ், மாயா, விஜய் வர்மா, மணி என மொத்தம் ஆறு பேர் இறுதிப் போட்டிக்கு செல்ல தகுதியாக இருந்தனர். இந்த நிலையில் விஜய் வர்மாவை மிட் வீக் எவிக்சன் என்று சொல்லி பாதியிலேயே பிக் பாஸ் வெளியேற்றி இருந்தனர். தொடர்ந்து விஷ்ணுவும் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக மாயா, தினேஷ், மணி, அர்ச்சனா இவர்கள் நால்வரில் அர்ச்சன விற்கு வெற்றி வாகை சூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான ரசிகர்களின் கருத்தும் அதுவாக தான் இருந்து வருகிறது.
நமது தமிழ் க்ளிட்ஸ் இணையதளத்தில் எடுக்கப்படும் வாக்களிப்பு முடிவுகள் பெரும்பாலும் மக்கள் மனங்களையே இத்தனை ஆண்டுகளாக பிரதிபலித்து வந்துள்ளது. நாம் வெளியிடும் முடிவுகள் பிக் பாஸ் முடிவுகளுக்கு 99 சதவீதம் பொருத்தமாகவே இத்தனை நாள் அமைந்திருக்கிறது. சில சமயங்களில் பிக் பாஸ் சிலரை வெளியேற்ற வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் மக்களை மனங்களுக்கு எதிராக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த சீசனின் கடைசி வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் அர்ச்சனா முதலிடத்தையும், மணி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
தினேஷ் மற்றும் மாயா இருவரும் முறையே மூன்று மற்றும் நான்காம் இடத்தை பிடித்திருக்க, விஷ்ணு ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறார். எனவே இந்த முறை அர்ச்சனா வெற்றி பெறுவது உறுதியாக இருப்பதாக தெரிகிறது. இருப்பினும் விஜய் டிவி என்ன முடிவெடுக்கப் போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.