தமிழ் திரையுலகில் இரு பெரும் துருவங்களாக இருக்கும் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் “கேப்டன் மில்லர்’ மற்றும் ‘அயலான்’ ஆகிய திரைப்படங்கள் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் பலரும் இந்த இரு படங்கள் குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமையாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது அருண் மாதேஸ்வரன் நடிப்பில் தற்போது நடித்திருக்கும் திரைப்படம் தான் ‘கேப்டன் மில்லர்’. இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடிகை பிரியங்கா அருள் மோகன்_ கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், நாசர், பிரபல மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் டீசர், ட்ரைலர் பாடல்கள் என ஒவ்வொன்றும் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ட்ரைலர் வீடியோவை பார்க்கும் பொழுது வெள்ளைக்காரர்களுக்கும் மலை வாழ் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு இடையே நடக்கும் சண்டை என்பது தெரிய வந்தது. இந்த சண்டையில் நடிகர் தனுஷ் முன் வரிசையில் நின்று சண்டை செய்வது போன்ற காட்சிகளும் இடம் பெற்றிருந்தது.

படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் படம் இந்த திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. படத்தை பார்த்துவிட்டு வெளியில் வந்த ரசிகர்கள் பலரும் கலவையான விமர்சனங்களையே கொடுத்திருக்கின்றனர். நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Bingoo Box