பிக்பாஸ் சீசன் 7-ன் 47வது நாளுக்கான ப்ரோமோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. இன்று காலை வெளியான ப்ரோமோவில் விசித்ராவிற்கும் நிக்ஸனுக்கும் இடையே சண்டை எழுந்திருந்தது. விசித்ரா, நிக்ஸனைப் பார்த்து ஐஷு வெளியில் போனதற்கு காரணம் அவர் 40 நாட்களாக எதுவும் சரியாக விளையாடாத காரணம் என்று கூறுகிறார். அப்போது குறிக்கிடும் நிக்ஸன், ஐஷு, நிக்ஸன் பற்றி பேசும் நீங்கள், ஏன் மணி ரவீனா பற்றி பேச மாட்டிக்கிறீங்க? என்று கோபத்துடன் கேட்கிறார். மேலும் அர்ச்சனா வெளியில் போனால் அதற்கு விசித்ரா தான் காரணம் என்று நிக்ஸன் பேசிக் கொண்டிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அப்போது அங்கு வரும் அர்ச்சனா, “எதற்கு என் பெயரை எடுக்கிறீர்கள்.? நீங்கள் அனைவரும் ஒருநாள் எலிமினேட் ஆகி வெளியில் செல்ல தான் போகிறீர்கள், அப்போது சென்று பாருங்கள் ஐஷு வெளியே போனதற்கு என்ன காரணம் என்பது உங்களுக்கு புரியும்” என்று நிக்ஸனை ஆஃப் செய்கிறார். இப்படியாக சண்டை நடந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இந்த வாரம் முழுவதும் சரியாக பங்கு எடுத்துக் கொள்ளாத இருவரை நாமினேட் செய்யுமாறு பிக்பாஸ் கூறுகிறார். அப்போது அனைவரும் எழுந்து விசித்ராவையும் அர்ச்சனாவையும் நாமினேட் செய்கின்றனர்.
விசித்ரா மற்றும் அர்ச்சனா இருவரும் இரண்டு நாட்கள் ஜெயிலில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும். ! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television