அம்மா நீ போயிடு..! நீ போனாதான் நான் டைரக்டர் ஆக முடியும்..! பாக்கியாவை விரட்டிய எழில்..! பாக்கியலட்சுமி ப்ரோமோ இதோ..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஆயிரம் எபிசோட்கள் கடந்து குடும்ப தலைவிகள் பேராதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது தொடர். நாளுக்கு நாள் இந்த தொடருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அம்மா நீ போயிடு..! நீ போனாதான் நான் டைரக்டர் ஆக முடியும்..! பாக்கியாவை விரட்டிய எழில்..! பாக்கியலட்சுமி ப்ரோமோ இதோ..! 1

விளம்பரம்

பாக்கியாவை குடும்பத்தில் இருந்து பிரிக்கவும் , அவரின் தொழிலை கெடுக்கவும் ஏற்பாடுகளை செய்து வருகிறார் கோபி. எழில் இயக்குனராக இருக்கும் முதல் படத்தின் பூஜை நிகழ்ச்சிக்கு பாக்கியாவை வரவிடாமல் தடுக்க திட்டம் தீட்டுகிறார் கோபி. மேலும் அதை எழில் மூலம் செய்ய திட்டம் தீட்டி உள்ளார். தயாரிப்பாளரும் அதையே கூறவே எழில் எதுவும் செய்ய முடியாமல் நிற்கிறார்.

அம்மா நீ போயிடு..! நீ போனாதான் நான் டைரக்டர் ஆக முடியும்..! பாக்கியாவை விரட்டிய எழில்..! பாக்கியலட்சுமி ப்ரோமோ இதோ..! 3

விளம்பரம்

தற்போது தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், ஆசையாக எழில் பட பூஜைக்கு வரும் பாக்கியாவை எழில் வாசலிலேயே அனுப்பி விடுகிறார். அழுதுகொண்டே வரும் பாக்கியாவிற்கு இன்ப அதிர்ச்சியில், கோபிக்கு பேரதிர்ச்சியும் காத்து கொண்டு உள்ளது. எழில் தனது அம்மாவின் பெயரையே படத்திற்கு பெயராக வைத்து உள்ளார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடையவை  இயக்குனர் ஷங்கர் இயக்கும் பிரம்மாண்ட படத்தின் முதல் டீசர்.! டைட்டிலை டீசருடன் அறிவித்த ஷங்கர்.!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TV

விளம்பரம்

Leave a Comment