பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றையக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாக இருக்கிறது. அதில் கமலஹாசன் அர்ச்சனா மற்றும் விசித்ரா இருவரையும் நிற்க வைத்து விதிமுறை குறித்து கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறார். கமல் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் இருவரும் திணறி வருகின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. கடந்த வாரம் நடந்த ‘கோர்ட் டாஸ்க்’ மற்றும் ‘உன்னைப் போல் ஒருவன்’ டாஸ்க் இரண்டிலும் சரியாக பங்கெடுத்துக் கொள்ளாத இருவரை தேர்வு செய்து சொல்லுமாறு ஹவுஸ் மேட்ஸிடம் பிக் பாஸ் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது அனைத்து ஹவுஸ்மேட்ஸ் ஒருமனதாக தேர்ந்தெடுத்து அர்ச்சனா மற்றும் விசித்ரா இருவரையும் சரியாக பங்கெடுத்துக் கொள்ளாதவர்கள் என்று தேர்ந்தெடுத்திருந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஹவுஸ் மேட்ஸின் இந்த முடிவை ஏற்க மறுத்த அர்ச்சனாவும் விசித்ராவும் தங்களால் ஜெயிலுக்கு செல்ல முடியாது என்று சொல்லி தர்ணா போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். இருவரும் வெளியில் அமர்ந்து வீட்டிற்குள் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒரு வழியாக இருவரும் ஜெயிலுக்கு சென்றனர். அவர்கள் சென்ற சில நிமிடங்களிலேயே அவர்களின் ஜெயில் தண்டனை காலம் முடிவுக்கு வந்ததாக பிக் பாஸ் அறிவித்திருந்தார். இது குறித்து கமல் சார் கண்டிப்பாக கேள்வி எழுப்ப வேண்டும் என்று சொல்லி ரசிகர்கள் பலரும் தொடர்ந்து கூறி வந்தனர். ஹவுஸ்மேட்ஸும் இது குறித்து கேள்வி எழுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து தற்போது கமலஹாசன் விசித்ரா மற்றும் அர்ச்சனா இருவரையும் நிற்க வைத்து கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television