அந்த 3 பேரையும் வெளிய அனுப்ப தான் பிக்பாஸ் இப்படி ஒரு டாஸ்க்கே வச்சிருக்காரு.! விஷ்ணு கணிப்பு

வெளியிட்டது

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்களை கடந்து விட்ட நிலையில் இன்றைய தினம் பூகம்பம் டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. மூன்று டாக்குகள் தொடர்ந்து வைக்கப்படும், மூன்று டாஸ்க்குகளில் போட்டியாளர்கள் ஜெயித்தால் மட்டுமே போட்டியில் நீடிக்க முடியும், இல்லை என்றால் அவர்களில் சிலர் வெளியேற்றப்பட்டு எலிமினேட் ஆகி சென்ற பழைய போட்டியாளர்கள் மூவரை மீண்டும் உள்ளே கொண்டு வர பிக் பாஸ் திட்டமிட்டுள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்குமோ? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளில் போட்டியாளர்கள் வெற்றி பெறுவார்களா? இல்லை அவர்கள் வெளியேற்றப்பட்டு, எலிமினேட் ஆகி சென்ற மூன்று பேர் உள்ளே வருவார்களா? என்கிற பரபரப்பு எழுந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த 3 பேரையும் வெளிய அனுப்ப தான் பிக்பாஸ் இப்படி ஒரு டாஸ்க்கே வச்சிருக்காரு.! விஷ்ணு கணிப்பு 1
தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் விஷ்ணுவும் தினேஷும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது விஷ்ணு தினேஷிடம், “ஏஜென்ட் கேங்கில் இருக்கும் மூன்று பேரையும் தூக்க வேண்டும், இவர்கள் அனைவருமே வெளியே போக வேண்டியவர்கள் தான். அதனால்தான் பிக் பாஸே இப்படி ஒரு டாஸ்கை கொடுத்திருக்கிறார். இவர்கள் மூன்று பேரை டாஸ்கின் மூலமாக வெளியே அனுப்பிவிட்டு, பழைய மூவரைக் கொண்டு வரத்தான் பிக் பாஸ் திட்டமிட்டு இருக்கிறார்” என்று கூறிக் கொண்டிருக்கிறார். தற்போது இருக்கும் போட்டியாளர்களான சரவணன் விக்ரம் மற்றும் அக்ஷயா இருவரும் மிகுந்த போரிங் போட்டியாளர்களாக இருந்து வருகின்றனர்.


அவர்கள் சுவாரசியமாக எதுவுமே செய்யவில்லை. இந்த நிலையில் அக்ஷயா நாமினேஷனில் மாட்டிக்கொள்ள சரவண விக்ரம் தப்பித்து விடுகிறார். இதை குறிப்பிடும் தினேஷ் “சரவணன் நாமினேஷனில் இருந்து எஸ்கேப் ஆனது மிராக்கிள்” என்று கூறுகிறார். அப்போது இவர்கள் ஓட்டை யாருக்கு போடுவது என்று தெரியாமல் வேஸ்ட் செய்து விட்டார்கள் என்று விஷ்ணு கூறுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்