விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வாரம் ‘பூகம்பம்’ என்கிற பெயரில் பிக் பாஸ் புதுவிதமான டாஸ்க்குகளை பிக்பாஸ் கொடுத்திருக்கிறார். இல்ல டாஸ்கின் பின்னணி என்னவென்றால் இதில் தோற்றால் வீட்டிலிருந்து மூன்று பேரை அனுப்பிவிட்டு, ஏற்கனவே வெளியேறிச் சென்ற மூன்று போட்டியாளர்களை மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே அனுப்ப திட்டத்தை பிக் பாஸ் செயல்படுத்த நினைக்கிறார். அதற்காக தற்போது கடுமையான டாஸ்க்குகள் வைக்கப்பட்டிருக்கிறது. இன்று பூகம்பம் டாஸ்க்கின் இரண்டாவது பகுதி நடைபெற்று வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் கைகளில் ஒரு குச்சியை பிடித்துக் கொண்டு அதில் பந்தை தாங்கிக் கொண்டு நிற்குமாறு பிக் பாஸ் கூறுகிறார். பந்து கீழே விழுந்து போட்டியாளர்களின் இந்த போட்டியில் தோற்றால் வீட்டிலிருந்து சர்க்கரை அல்லது உப்பில் ஏதேனும் ஒன்று திரும்ப பெறப்படும் என்று அறிவித்திருக்கிறார். போட்டியில் தோற்று விட்டதால் சர்க்கரையை அனைவரும் இணைந்து தியாகம் செய்கின்றனர். இந்த நிலையில் இரண்டாவதாக ஒரு ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் முக்கோண வடிவில் இரண்டு ஓட்டைகளுடன் ஒரு பலகை கொடுக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டு பந்துகளையும் சரியாக பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் போட்டியாளர்கள் பலரும் பந்தை சரியாக பொருத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் வென்றார்களா? தோற்றார்களா? என்பது தெரியவில்லை. தற்போது வெளியாக இருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழ கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..!! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television