கயலும் நட்சத்திராவும் செய்யும் காமெடிய பாருங்க.! சிரிச்சு முடில.! Cute Blooper வீடியோ.!

கயல் சீரியல் நடிகை சைத்ராவும், வள்ளி திருமணம் நடிகை நக்ஷத்ராவும் சேர்ந்து செய்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்கிற சீரியல் மூலமாக அறிமுகமானவர்கள் சைத்ரா ரெட்டி மற்றும் நட்சத்திரா. இதில் சைத்ரா ரெட்டி பெங்களூருவை சேர்ந்தவர். நட்சத்திரா கேரளாவை சேர்ந்தவர். இருவரும் இந்த நாடகத்திற்கு பின்னர் நெருங்கிய தோழிகள் ஆயினர். இவர்களின் நட்பு பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். யாரடி நீ மோகினி சீரியலில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனங்களில் இடம் பிடித்தவர் சைத்ரா ரெட்டி. ஹீரோயினுக்கு எந்த அளவிற்கு ரசிகர் பட்டாளம் இருந்ததோ, அதே அளவிற்கு வில்லிக்கும் ரசிகர் பட்டாளம் இருக்கும் என்பதை நிரூபித்தவர் சைத்ரா. நட்சத்திரா மற்றும் சைத்ரா இருவரும் எதிரிகள் போல் நாடகத்தில் நடித்திருந்தாலும், நிஜத்தில் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கயலும் நட்சத்திராவும் செய்யும் காமெடிய பாருங்க.! சிரிச்சு முடில.! Cute Blooper வீடியோ.! 1

விளம்பரம்

அதே போல செம்பருத்தி சீரியலில் நடித்த ஷபானா, ரேஷ்மா போன்ற ஹீரோயின்களும் இவர்களுடன் நட்பில் இருக்கிறார்கள். இந்த 4 பேரும் அடுத்தவர்கள் பார்த்து பொறாமை கொள்ளும் அளவிற்கு நெருங்கிய தோழிகளாக இருக்கிறார்கள். எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வது, அவுட்டிங் செல்வது என்று அடிக்கடி தங்களது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள். இதில் செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவை தவிர திருமணமான அனைவரும் சீரியலில் கவனம் செலுத்தி வருகிறார்கள். தற்போது நட்சத்திரா கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் வள்ளி திருமணம் என்கிற சீரியலில் நடித்து வருகிறார். நட்சத்திரா தமிழில் கிடா பூசாரி மகுடி என்கிற படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் இந்த படம் பெரிய அளவில் வெற்றியை தரவில்லை. எனவே சின்னத்திரை பக்கம் திரும்பிய அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்கிற சீரியலில் நடித்தார். இதன் பின்னர் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் பெருகியது.

தொடர்புடையவை  "எழில் மாதிரி ஒரு பையன் எனக்கு கணவனா வேணும்" எழிலிடம் காதலை சொன்ன கயல்.! சூப்பர் ப்ரோமோ

கயலும் நட்சத்திராவும் செய்யும் காமெடிய பாருங்க.! சிரிச்சு முடில.! Cute Blooper வீடியோ.! 3

விளம்பரம்

நட்சத்திரா சில மாதங்களுக்கு முன்பு தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்து இருந்தார் நக்ஷத்திரா. நட்சத்ராவின் வீட்டுக்கு சென்ற கயல் தனது தோழியின் கர்ப்பமாக இருக்கும் வயிற்றை முத்தமிட்டு அந்த புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார். சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் சைத்ரா மற்றும் நக்ஷத்திரா இருவரும் எதாவது ஒரு வீடியோவை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் தற்போது இருவரும் காமெடியாக ரீல்ஸ் செய்து உள்ளனர். அப்போது அனைவர்க்கும் சிரிப்பு வரவே எல்லாரும் சிரித்து விடுகின்றனர். செம்ம காமெடியாக உள்ள அந்த வீடியோவை நீங்களும் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch The Below Video.! 

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment