விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வாரம் ‘பூகம்பம்’ என்கிற பெயரில் பிக் பாஸ் புதுவிதமான டாஸ்க்குகளை பிக்பாஸ் கொடுத்திருக்கிறார். இல்ல டாஸ்கின் பின்னணி என்னவென்றால் இதில் தோற்றால் வீட்டிலிருந்து மூன்று பேரை அனுப்பிவிட்டு, ஏற்கனவே வெளியேறிச் சென்ற மூன்று போட்டியாளர்களை மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே அனுப்ப திட்டத்தை பிக் பாஸ் செயல்படுத்த நினைக்கிறார். அதற்காக தற்போது கடுமையான டாஸ்க்குகள் வைக்கப்பட்டிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் ஆக்ட்டிவிட்டி ஏரியாவில் ஒரு இரும்பு டனல் ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. அதில் இருக்கும் ஓட்டைகளில் விழாமல் பந்தை கடைசியில் இருக்கும் வாளியில் போட்டால் வெற்றி பெற முடியும் என்று பிக்பாஸ் அறிவிக்கிறார். ஆனால் பல ஹவுஸ் மேட்ஸ் இந்த போட்டியில் தோல்வியை தழுவுகின்றனர். இதனால் வீட்டில் இருக்கும் ஒரு நபரை தேர்ந்தெடுத்து அடுத்த வார நாமினேஷனுக்கு நேரடியாக நாமினேட் செய்ய பிக்பாஸ் அறிவுறுத்துகிறார்.
அப்போது விஷ்ணு கேப்டனை நாமினேட் செய்யலாமா என்று கேட்கிறார். தற்போது வெளியாக இருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழ கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..!! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television