“பொளேர் பொளேர்னு அறைஞ்சிடுவேன்” அர்ச்சனாவை பார்த்து கூறிய விஷ்ணு.! வெளுத்து வாங்கிய அர்ச்சனா

வெளியிட்டது

பிக் பாஸ் சீசன் 7 தொடங்கி இன்றுடன் 59 நாட்கள் முடிவடைந்து விட்டது 23 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், தற்போது 14 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். 60 நாட்களை நெருங்கிய நிலையில் தற்போது சுவாரஸ்யமான டாஸ்க்குகள் பலவற்றை பிக் பாஸ் அறிமுகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது முதல் டாஸ்காக அரண்மனை டாஸ்கை பிக் பாஸ் கொடுத்துள்ளார். பிக் பாஸைப் பொறுத்த வரை தனித்தனியாக ஹவுஸ் மேட்ஸ் விளையாடும் வரை பெரிய அளவில் பிரச்சனை இருக்காது் ஆனால் குழுவாக சேரத் தொடங்கிய பின்னர் பிரச்சனை பெரிதாவது வழக்கமாக இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"பொளேர் பொளேர்னு அறைஞ்சிடுவேன்" அர்ச்சனாவை பார்த்து கூறிய விஷ்ணு.! வெளுத்து வாங்கிய அர்ச்சனா 1
கடந்த சீசனில் கூட அரண்மனை டாஸ்கில் விக்ரமன் மற்றும் அசீம் இருவரும் கடுமையாக மோதிக் கொண்டிருந்தனர். இருவருக்கும் சண்டை வருவதற்கு காரணமாக அரண்மனை டாஸ்க் அமைந்திருந்தது் இந்த முறையும் அரண்மனை டாஸ்கை பிக் பாஸ் வைத்திருக்கிறார். காலை வெளியான முதல் ப்ரோமோவில் நிக்ஸனுக்கு அரசன் பட்டத்தை வழங்கி இருக்கின்றனர். அவர் அரசன் ஆன உடனேயே ஜோவிகா, ரவீனா மற்றும் சரவணன் விக்ரமை கொட்டும் மழையில் முட்டி போட வைக்கிறார். இதை எதிர்த்து ஹவுஸ் மேட்ஸ் சிலர் கேள்வி கேட்கின்றனர். சரவண விக்ரமும் கோபத்தில் கத்துகிறார். அந்த ப்ரோமோ வெளியாகி இருந்த நிலையில், தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் விஷ்ணுவுக்கும் அர்ச்சனாவுக்கும் சண்டை எழுந்துள்ளது. தற்போது அதில் அர்ச்சனாவை பார்த்து பொளிர் பொளிரென்று நான் டயலாக்கிலேயே வச்சு செய்வேன் என்று அர்ச்சனாவை பார்த்து விஷ்ணு கூறுகிறார். இதனால் கடுப்பான அர்ச்சனா எங்கே அடித்து பார் என்று கோபத்தில் விஷ்ணுவிடம் கத்துகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்