எதிர்நீச்சல் சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஜீவானந்தம் தனது மனைவி மற்றும் மகளுடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் கதிர், வளவன் ஆகியோர் துப்பாக்கியால் ஜீவானந்தத்தை சுடுவது போன்ற ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அப்போது ஜீவானந்தத்தின் மகள் அப்பா என்று கத்தி அழுகிறார். இதனால் ஜீவானந்தத்தை உண்மையிலேயே சுட்டு விட்டார்களோ? என்கிற பரபரப்பு எழுந்திருக்கிறது. அப்படி நடந்தால் கதை இனி எப்படி நகரப் போகிறது என்பதும் கேள்விக்குறியாகி இருக்கிறது. ஜீவானந்தத்தை தேடி கொடைக்கானலில் இருக்கும் கவுஞ்சி மலை கிராமத்திற்கு வரும் வளவன் அவரது ஆட்கள் ஜீவானந்தத்தின் வீட்டை சுற்றி வளைக்கின்றனர். அங்கு ஜீவானந்தம் தனது மனைவி மற்றும் மகளுடன் பேசிக் கொண்டிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த சமயம் பார்த்து ஜனனியும் அந்த இடத்திற்கு வருகிறார். ஜீவானந்த்த்திடம் இருந்த துப்பாக்கியை அவரது மகள் ஜன்னல் வழியாக வீசி கீழே எறிந்துவிட்டார். இதனால் நிராயுதபாணியாக இருந்த ஜீவானந்தமை குணசேகரன் அனுப்பிய ஆட்கள் சுற்றி வளைக்கின்றனர். இதனால் செய்வதறியாது ஒரு கம்பியை எடுத்து அவர்களை தாக்கத் தொடங்குகிறார். அப்போது கதிர் வளவனைப் பார்த்து அவனை சுடுமாறு கூற வளவனும் ஜன்னல் வழியாக துப்பாக்கியை நீட்டி சுடுகிறார். துப்பாக்கி சத்தம் கேட்ட பின்பு அந்த இடமே அமைதியாகிறது. ஜனனி அங்கு நடக்கும் காட்சிகளை பார்த்து விம்மி விம்மி அழுது கொண்டிருக்கிறார் ஓரத்தில் ஒளிந்திருக்கும் ஜீவானந்தத்தின் மகள் அப்பா என்று கத்தி கதறி அழுது கொண்டிருக்கிறார். இதனால் ஜீவானந்தம் வளவன் மற்றும் கதிரால் சுடப்பட்டு விட்டாரோ என்கிற ஐயம் எழுகிறது.

ஒரு வேளை ஜீவானந்தம் சுடப்பட்டு இருந்தால் அடுத்து என்ன நடக்கும்? கதை இனி எப்படி நகரப் போகிறது என்கிற பரபரப்பு தற்போது எதிர்நீச்சல் சீரியலில் எழுந்திருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video.!
YouTube Video Embed Code Credits: SUN TV