ஜீவாவை அடித்த பிரசாந்தை அடித்து துவைத்த மூர்த்தி.! தம்பிக்காக பொங்கி எழுந்த அண்ணன்.!

ஜீவாவின் சட்டையை பிடித்த பிரசாந்தை அடித்து துவைத்திருக்கிறார் மூர்த்தி. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் விறுவிறுப்பான கட்டங்கள் நடந்து வருகிறது. தற்போது நீண்ட முயற்சிக்குப் பிறகு மூர்த்தி ‘தனலட்சுமி இல்லம்’ என்கிற மிகப்பெரிய வீடு ஒன்றை கட்டியிருக்கிறார் மூர்த்தி. அதன் கிரகப்பிரவேச பணிகள் நடந்து வருகிறது. எந்த விசேஷம் என்றாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சண்டை இல்லாமல் இல்லை. எப்போதும் சண்டையை கிளப்புபவர்கள், ஒன்று இரண்டாவது சம்பந்தியாக இருக்கும் ஜனார்த்தனன் அல்லது மூன்றாவது சம்பந்தியாக இருக்கும் முல்லையின் அம்மாவாகத்தான் எப்போதும் இருக்கிறார்கள். அதுபோல இந்த முறையும் ஜனார்த்தனன் ஒரு புது சண்டையை கிளப்பி இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜீவாவை அடித்த பிரசாந்தை அடித்து துவைத்த மூர்த்தி.! தம்பிக்காக பொங்கி எழுந்த அண்ணன்.! 1

விளம்பரம்

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மூர்த்தி, ஜீவா, ஜனார்த்தனன் மற்றும் அவரது இரண்டாவது மருமகன் பிரசாந்த் ஆகியோழ் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஜீவாவிடம் ஜனார்த்தனன் பிரசாந்த் சொல்லும் பிசினஸில் போட்டால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என்று கூறுகிறார். அதற்கு பதிலளிக்கும் ஜீவா இதுபோல பிசினஸ் என்று சொல்லி பலர் பணங்களை ஏமாந்து இருக்கிறார்கள், தனக்கு இதில் ஆர்வம் இல்லை என்று சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல முயற்சிக்கிறார். அப்போது அவரை தடுக்கும் பிரசாந்த் அப்போது நான் ஏமாற்றுகிறேன் என்று சொல்கிறாயா என்று சொல்லி ஜீவாவின் சட்டையை பிடிக்கிறார். இதனால் கோபமான மூர்த்தி பிரசாந்தை அடித்துத் துவைக்கிறார். மேலும் ஜீவாவை பார்த்து ஜனார்த்தனன் இந்த ஆள் ஏதாவது ஒரு வேலைக்கு சென்று ஒரு ரூபாய் சம்பாதித்து இருக்கிறாரா என்று திட்டுகிறார்.

தொடர்புடையவை  திருமண தேதியை அறிவித்த நவீன், கண்மணி..சின்னத்திரையில் செம்ம Cute Pair ரெடி | Navin Kanmani

ஜீவாவை அடித்த பிரசாந்தை அடித்து துவைத்த மூர்த்தி.! தம்பிக்காக பொங்கி எழுந்த அண்ணன்.! 3

விளம்பரம்

அப்போது கோபமாக மூர்த்தி ஜனார்த்தனை வெளுத்து வாங்குகிறார். இதனால் ஜீவாவிற்கு தனது அண்ணன் மீது பாசம் ஏற்படுகிறது. இத்தனை நாள் மாமனார் வீட்டில் பல சங்கடங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஜீவா மீண்டும் தனது அண்ணன் மூர்த்தியுடன் வந்து இணைவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment