பிக் பாஸ் சீசன் 7ன் இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் அர்ச்சனா மற்றும் விஷ்ணு இடையே இன்னமும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. நான் இனி அழவே போவதில்லை என்று சொல்லிக் கொண்டிருந்த அர்ச்சனா மீண்டும் மனமுடைந்து அழத் தொடங்கி இருக்கிறார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் மீண்டும் மீண்டும் அர்ச்சனாவை ஏன் இப்படி துன்புறுத்துகிறீர்கள் என்று சொல்லி கடுப்பாகி உள்ளனர். ப்ரோமோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக அர்ச்சனா மற்றும் விஷ்ணு இருவருக்கிடையே எழுந்த சண்டை இன்றும் நீடித்து வருகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் பயங்கரமாக வார்த்தைகளால் தாக்கிக் கொள்கின்றனர். பூர்ணிமா, விஷ்ணு, அர்ச்சனா ஆகிய மூவரின் கைகளையும் கட்டி டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது ரவீனா அருகில் வந்து நீங்கள் இருவரும் நண்பர்கள் ஆகாதீர்கள், சண்டை போடுங்கள் என்று கூறுகிறார். இதனால் கோபமடைந்த அர்ச்சனா? என்னுடைய உணர்வுகள் உங்களுக்கு விளையாட்டா இருக்கா என்று கத்துகிறார்.
பின்னர் சண்டை பெரிதாகவே, கயிறை அவிழ்த்துவிட்டு கத்திக் கொண்டு அர்ச்சனா ஓடுகிறார். பின்னர் தான் வளர்க்கப்பட்ட விதம் குறித்தும், தனக்குள் இருக்கும் குழந்தை தனத்தை விஷ்ணு கேள்வி எழுப்பியதால் ஆவேசத்தில் அர்ச்சனா அழத் தொடங்குகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television