கர்ப்பமாக இருக்கும் அஞ்சலி.! கடுப்பில் வீட்டை விட்டு வெளியேறிய முத்தழகு.! ப்ரோமோ இதோ.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு வித்தியாசமான கதை அம்சத்துடன் கூடிய தொடர் தான் ‘முத்தழகு’. தற்போது இந்த சீரியலில் அஞ்சலி கர்ப்பமாக இருப்பதை அறிந்து கொள்ளும் முத்தழகு வீட்டை விட்டு வெளியேறுகிறார். இதனால் பூமி கதறி அழுது கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. மற்ற சீரியல்களைப் போல் அல்லாமல் மிகவும் வித்தியாசமான கதையம்சம் கொண்டது ‘முத்தழகு’ சீரியல். இந்த சீரியலின் கதையைப் பொறுத்த வரை ஹீரோ பூமி நாதனுக்கு முத்தழகு மற்றும் அஞ்சலி என்று இரண்டு மனைவிகள். இதில் அவர் யாருடன் இணைந்து வாழப் போகிறார்.? என்கிற சஸ்பென்சுடன் கதை நகர்ந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கர்ப்பமாக இருக்கும் அஞ்சலி.! கடுப்பில் வீட்டை விட்டு வெளியேறிய முத்தழகு.! ப்ரோமோ இதோ.! 1
வேலை வெட்டிக்கே செல்லாத ஹீரோவிற்கு இரண்டு பொண்டாட்டிகள். அதில் அவர் யாருடன் சேரப் போகிறார் என்கிற திருப்பத்துடன் கதையை நகர்த்தி வருகிறார் இயக்குனர். பலராலும் இந்த கதை விமர்சிக்கப்பட்ட போதிலும் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் போது அஞ்சலி பூமிநாதனிடம் வந்து தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கூறுகிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போன முத்தழகு வீட்டிற்குள் வந்து பெட்டி படுக்கைகளை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார். அப்போது அங்கு பூமிநாதன் சமாதானம் பேச வருகிறார். அவரிடம், “உங்கள் முத்தழகு இறந்துவிட்டாள், திரும்பி வரமாட்டாள்” என்று சொல்லிவிட்டு கோபத்தில் வீட்டை விட்டு முத்தழகு வெளியேறுகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  ஜேம்ஸ் வசந்தன் மற்றும் ரசிகர்கள் உதவியுடன் தாய்க்கு புது வீடு கட்டிய பிக்பாஸ் தாமரை.! Home Tour Video.!

கர்ப்பமாக இருக்கும் அஞ்சலி.! கடுப்பில் வீட்டை விட்டு வெளியேறிய முத்தழகு.! ப்ரோமோ இதோ.! 3

இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த கதைக்கு ஒரு எண்டே இல்லையா என்று சொல்லி கலாய்த்து வருகின்றனர். தற்போது வெளியான ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment