மூஞ்சியை உடைப்பேன்னு சொன்னியே.! குறும்படம் போட்டு காட்டவா? விஜயை அலறவிட்ட கமல்

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7ன் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் வன்முறை பற்றி பேசிய விஜய் வர்மாவிடம் கமல் மஞ்சள் அட்டையை காட்டுகிறார். தொடர்ந்து மூன்று முறை இந்த அட்டையை நீங்கள் பெற்றால் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி 18 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது பிக் பாஸ் சீசன் 7. 18 போட்டியாருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி முதல் வாரமே சண்டை சச்சரவு என்று தொடங்கியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மூஞ்சியை உடைப்பேன்னு சொன்னியே.! குறும்படம் போட்டு காட்டவா? விஜயை அலறவிட்ட கமல் 1
குறிப்பாக விசித்ரா அனன்யாவிடம் டாட்டூ பற்றி கேட்ட விஷயங்களும், ஜோவிகாவிடம் படிப்பு பற்றி கேட்ட விஷயங்களும் மிகப்பெரிய சண்டையாக மாறியது. இதுகுறித்து கமல் நேற்றைய எபிசோடில் விவாதித்து பிரச்சனையை முடித்து வைத்தார். இதற்கிடையே அடுத்த சண்டையாக விஜய் வர்மா மற்றும் பிரதீப் ஆண்டனிக்கு இடையேயான சண்டை குறித்து பேசுகிறார். விஜய் வர்மா பேசும் பொழுது பிரதீப் ஒருமுறை தன்னை ஷூவால் இடித்துவிட்டு மன்னிப்பு கேட்காமல் சென்றுவிட்டார். நான் அவரது முகத்தை உடைத்து விடுவேன். வெளியில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உங்களை ஏதாவது செய்து விடுவார்கள் என்று மிரட்டும் நோக்கில் பேசினார்.


இதுகுறித்து பேசும் கமல், விஜய் வர்மாவிற்கு வார்னிங் கொடுக்கும் விதமாக மஞ்சள் அட்டையை காட்டுகிறார். இதை நீங்கள் மூன்று முறை பெற்றீர்கள் என்றால் யாருடைய அனுமதியும் இல்லாமல் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவீர்கள் என்று எச்சரிக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்…! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்