பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிய பூர்ணிமா..! எத்தனை லட்சம் தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது முடியும் தருவாயில் இருக்கும் நிலையில் பணப்பெட்டி டாஸ்க்கில் இருந்து பூர்ணிமா பணத்துடன் வெளியேறி இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த தகவலை பலரும் உறுதி செய்து இருக்கின்றனர். ஆனால் இன்னமும் அவர் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறிய காட்சிகள் ஒளிபரப்பாகாமல் இருந்து வருகிறது. பல கோடி மக்கள் பார்த்து ரசிக்கும் ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. 95 நாட்களை நிறைவு செய்திருக்கும் இந்த நிகழ்ச்சி விரைவில் இறுதி கட்டங்களை நோக்கி நகர இருக்கிறது. 23 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் விளையாடி வருகின்றனர். 15 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர்.

பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிய பூர்ணிமா..! எத்தனை லட்சம் தெரியுமா? 1
இந்த நிலையில் இன்னும் ஒரு வார காலமே மீதம் இருப்பதால் 8 போட்டியாளர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகும். எனவே பணப்பெட்டியை வைத்து ஒரு நபரை வெளியேற்றிவிட்டு மீதமிருக்கும் ஏழு பேரில் இந்த வாரம் மீதம் இரண்டு பேரை எலிமினேட் செய்ய பிக் பாஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதன் பின்னர் ஐந்து பேரை இறுதி போட்டிக்கு அழைத்துச் செல்லவும் அதிலிருந்து வெற்றியாளர் – வின்னர் என இருவரை தேர்ந்தெடுக்கவும் பிக்பாஸ் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் பணப்பெட்டியை வைத்து மூன்று நாட்கள் ஆகிறது. ஆரம்பத்தில் ஒரு லட்சத்துடன் தொடங்கிய இந்த பேரம், படிப்படியாக உயர்ந்திருக்கிறது. ரூ.3 லட்சம், ரூ.5 லட்சம், ரூ.9 லட்சம், ரூ.12 லட்சம் என எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்றிருக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  இனியா நீ ரூம்ல பெட்ல தூங்கு, நான் ஹால்ல படுத்துகிறேன்.! ராதிகா காட்டிய பெருந்தன்மை.!

பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிய பூர்ணிமா..! எத்தனை லட்சம் தெரியுமா? 3
இந்த நிலையில் தற்போது பூர்ணிமா ரூ.16 லட்சம் ரூபாய் உடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இது அதிகாரப்பூர்வமற்ற தகவல் மட்டுமே. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் லைவில் பூர்ணிமா இன்னும் பணத்தை எடுப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாகவில்லை. எனவே இது எந்த அளவிற்கு உண்மை என்பதை தெரியவில்லை. அப்படி அவர் இன்றைக்கு பணத்தை எடுத்து இருந்தால் நாளை எபிசோடில் தான் முழு விவரங்கள் தெரியவரும். 95 நாட்கள் விளையாடிய சம்பளத்துடன் ரூ.16 லட்சத்தை எடுத்துக்கொண்டு பூர்ணிமா ஸ்மார்ட் ஆக மூர் செய்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிய பூர்ணிமா..! எத்தனை லட்சம் தெரியுமா? 5
பிக் பாஸ் டைட்டில் வின்னராக வருபவர்களுக்கு இந்த 16 லட்சத்தை கழித்துவிட்டு மீதம் இருக்கும் தொகையே வெற்றி பரிசாக கொடுக்கப்படும். வெற்றியாளருக்கு 50 லட்சம் பரிசுத்தொகை என்றால் அதில் மீதம் 34 லட்சம் மட்டுமே வெற்றியாளருக்கு கொடுக்கப்படும். எனவே பூர்ணிமா வின்னர் ஆக முடியாது என்பதை தெரிந்து கொண்டு ஸ்மார்ட்டாக மூவ் செய்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment