BiggBoss மேடையை தொட்டு வணங்கி ஆரம்பித்த சிம்பு.. இனிமே தான் உண்மையான Ultimate காத்திருக்கு | Feb27 Promo 2

வெளியிட்டது

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை புதிதாக தொகுத்து வழங்க உள்ளார் நடிகர் சிம்பு. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் வகையில் தொடங்கப்பட்டதுதான் பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதுவித நிகழ்ச்சி. BiggBoss Ultimate-லிருந்து கமல் விலகிவிட்டார். இதை தொடர்ந்து மீதம் உள்ள நாட்களை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க உள்ளார். அவர் வழங்கும் பிக்பாஸ்ஸின் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் அல்டிமேட் கடந்த ஐந்து சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து 70 நாட்கள் மட்டும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்பதுதான்.

Biggboss Ultimate

ஜனவரி 30ம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட்ட இந்த BiggBoss Ultimate 16 நபர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீசன் 1ல் கலந்து கொண்ட ஓவியா மற்றும் பரணி ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக வரவில்லை. எனவே 14 நபர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, தாடி பாலாஜி, ஷாரிக், வனிதா, அபிராமி, நிரூப், பாலா, அனிதா சம்பத், தாமரை, அபிநய், ஸ்ருதி, சினேகன், ஜூலி ஆகியோர் ஆவர். இதில் முதல் வாரமே சுரேஷ் சக்கரவர்த்தி வெளியே அனுப்பபட்டார். இரண்டாவது வாரம் சுஜா வெளியில் அனுப்பப்பட்டார்.
Youtube Video Code Embed Credits: Disney + Hotstar Tamil

தற்போது வெளியாகியுள்ள BiggBoss Ultimate ப்ரோமோவில்  நடிகர் சிம்பு அவர்கள் முதல் முறையாக மேடையில் தோன்றுகிறார். அதற்க்கு முன்பாக மயிலாட்டம் ஒயிலாட்டம் கரகாட்டம் என அவரை மேள தாளம் முழங்க வரவேற்கின்றனர். மேடையில் வந்த பின்பு குனிந்து மேடையை தொட்டு வணங்குகிறார். ரசிகர்கள் கைதட்டி அமர்க்களம் செய்கின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.. Watch the below video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்