பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை புதிதாக தொகுத்து வழங்க உள்ளார் நடிகர் சிம்பு. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் வகையில் தொடங்கப்பட்டதுதான் பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதுவித நிகழ்ச்சி. BiggBoss Ultimate-லிருந்து கமல் விலகிவிட்டார். இதை தொடர்ந்து மீதம் உள்ள நாட்களை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க உள்ளார். நேற்று வைல்ட் கார்டு என்ட்ரியாக சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் kpy சதிஷ் ஆகியோர் அனுப்பப்பட்டுள்ளனர். பிக்பாஸ் அல்டிமேட் கடந்த ஐந்து சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து 70 நாட்கள் மட்டும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்பதுதான். இதில் சதிஷ் முந்தைய பிக்பாஸ் சீன்களில் கலந்து கொள்ளாதவர் என்பது குறிப்பிடத்தக்கது

ஜனவரி 30ம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட்ட இந்த BiggBoss Ultimate 16 நபர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீசன் 1ல் கலந்து கொண்ட ஓவியா மற்றும் பரணி ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக வரவில்லை. எனவே 14 நபர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, தாடி பாலாஜி, ஷாரிக், வனிதா, அபிராமி, நிரூப், பாலா, அனிதா சம்பத், தாமரை, அபிநய், ஸ்ருதி, சினேகன், ஜூலி ஆகியோர் ஆவர். இதில் முதல் வாரமே சுரேஷ் சக்கரவர்த்தி வெளியே அனுப்பபட்டார். இரண்டாவது வாரம் சுஜா வெளியில் அனுப்பப்பட்டார்.
Youtube Video Code Embed Credits: Disney + Hotstar Tamil

தற்போது வெளியாகியுள்ள BiggBoss Ultimate ப்ரோமோவில் சதீஷை பிக்பாஸ் வீட்டிற்குள் வரவேற்கிறோம் என்ற பெயரில் அவரது தலையில் மஞ்சள் தண்ணீரை ஊற்றி குங்குமம் வைத்து அலப்பறை செய்து வருகின்றனர் ஹவுஸ் மேட்ஸ். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..Watch BiggBoss Ultimate Promo Below..