நடிகர் பாக்கியராஜ் இன்று தனது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடி இருக்கிறார். அந்த அழகிய புகைப்படங்களை அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப் பாளையத்தில் பிறந்து வளர்ந்த, நடிகர் பாக்யராஜுக்கு தற்போது 71 வயது ஆகிறது.

1953ம் ஆண்டு பிறந்த இவர் முதன்முதலாக ‘16 வயதினிலே’ படத்தின் மூலமாக துணை இயக்குனராக அறிமுகமானார். மேலும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருக்கிறார். தொடர்ந்து ‘கிழக்கே போகும் ரயில்’ படத்திலும் துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அதேபோல இந்த படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். பின்னர் 1979ம் ஆண்டு வெளியான ‘புதிய வார்ப்புகள்’ என்கிற படத்தில் மூலமாக ஹீரோவாக அவதாரம் எடுத்தார்
தொடர்ந்து ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தை இயக்கியதன் மூலமாக இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். அதன் பின்னர் சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் அவர், பல படங்களை இயக்கியும் இருக்கிறார். இது மட்டுமல்லாமல் ‘சித்தி பாகம் 2, ‘ராஜா ராணி’, ‘செந்தூரப்பூவே’, ‘வித்யா நம்பர் ஒன்’ போன்ற சீரியல்களிலும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கெடுத்திருக்கிறார். பாக்யராஜ் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படங்கள் ‘காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்’ மற்றும் ‘டாடா’ இந்த இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது கைவசம் சில படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு இன்று 71வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டிருக்கிறது.
அவரது மகன் சாந்தனு, மனைவி பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் மருமகள் கிகி விஜய் ஆகியோர் இணைந்து கேக் வெட்டி பாக்யராஜின் பிறந்தநாளை கொண்டாடி இருக்கின்றனர். இந்த புகைப்படங்களை பூர்ணிமா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பலரும் பாக்கியராஜின் பிறந்தநாளுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.