நடிகர் பரத் நடித்திருக்கும் அவரது ஐம்பதாவது படத்தின் டிரைலர் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. மீண்டும் வாணி போஜனுடன் கைகோர்த்திருக்கும் பரத்தின் 50-வது படத்திற்கு லவ் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே பரத்துடன் இணைந்து வாணி போஜன் நடித்த “மிரள்” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது மீண்டும் வாணி போஜன் மற்றும் பரத் காம்பினேஷன் ஒன்றாக இணைந்து இருக்கிறது. திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படத்தை இயக்குனர் ஆர்பி பாலா இயக்கியிருக்கிறார். இவரும் இவரது மனைவி கௌசல்யா பாலா இருவரும் இணைந்து தனது ஆர்பி ஃபிலிம்ஸ் சார்பில் இந்த படத்தை தயாரித்திருக்கின்றனர். இந்தப் படத்திற்கு ரோனி ரஃபேல் என்பவர் இசையமைத்து இருக்கிறார். கிரைம் திரில்லர் ஜானரில் இந்த படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது. ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ட்ரெய்லரை பார்க்கும் பொழுது பரத்தும் வாணி போஜனும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்திற்கு பின்னர் அவர்களுக்குள் சின்ன சின்ன விஷயங்களுக்கு சண்டை ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே செல்லும் பரத், வாணி போஜனை அடித்துக் கொன்று விடுகிறார். அவர் வேண்டுமென்றே அதை செய்யவில்லை, ஆனால் எதிர்பாராத விதமாக நடந்து வருகிறது. சுவற்றில் வாணி போஜனின் தலையை மோதி விட அவர் தலையில் இருந்து ரத்தம் வந்து இறந்து விடுகிறார்.
அதை மறைப்பதற்காக தனது நண்பர்களின் உதவியை பரத் நாடுகிறார். அதன் பின்னர் என்ன நடந்தது? என்று விறுவிறுப்பாக ட்ரெய்லர் பயணிக்கிறது. இந்த படத்திற்கு பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். அஜய் மனோஜ் படத்தொகுப்பு பணிகளை செய்து இருக்கிறார். கிரைம் திரில்லர் ஜானரில் இந்த படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இது பரத்தின் ஐம்பதாவது திரைப்படமாகும். எனவே இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வருகிற ஜூலை 28ஆம் தேதி இந்த படம் தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராதாரவி, டேனியல், விவேக் பிரசன்னா, ஆடம்ஸ் போன்ற பலர் நடித்திருக்கின்றனர். இந்த ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Think Music India