குக் வித் கோமாளியில் கோமாளியாக வரும் சுனிதா தற்போது உயர் ரக கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அந்த வீடியோவை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். தற்போது சுனிதாவிற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அசாம் மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர் சுனிதா கோகோய். இவர் நடனத்தின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக பல நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதற்காக சென்னைக்கு வந்தார். கொஞ்சம் கொஞ்சமாக தமிழை கற்றுக் கொண்ட இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக தற்போது பிரபலமாக இருக்கிறார். இவரது நடனத் திறமையை விட இவரது கொஞ்சம் தமிழுக்கும் காமெடி திறமைக்கும் இவரை ரசிக்கும் மக்கள் பலர் இருக்கின்றனர். மூன்று சீசன்களாக குக் வித் கோமாளியில் தற்போது கோமாளியாக வந்து கொண்டிருக்கிறார் சுனிதா. இந்த நிலையில் அவர் உயர் ரக கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அந்த வீடியோவை அவர் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்று சொல்லும் விதத்தில் தற்போது சுனிதாவிற்கும் தமிழ்நாடு ஒரு அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது. இதை ஒரு மேடையில் பேசும் பொழுது சுனிதா கண்ணீர் மல்க தெரிவித்து இருந்தார். தமிழ் மக்கள் அன்பை வாரி வழங்குவார்கள், அவர்கள் என்னை ஏற்றுக் கொள்வார்களா என்று எனக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் தற்போது அனைவரும் தன்னை ஏற்றுக் கொண்டார்கள் என்று கண்ணீர் மல்க அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார். வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கும் சுனிதா, தற்போது முதல் முறையாக உயர்ரக கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அந்த வீடியோவை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். சுனிதா எக்ஸ்பிரஸ் என்கிற youtube சேனலை நடத்தி வரும் அவர் தற்போது அந்த வீடியோவை அந்த சேனலில் பகிர்ந்திருக்கிறார்.

லெக்சஸ் என்கிற நிறுவனத்தின் இந்த காரின் விலை சுமார் 60 லட்சம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுனிதா வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவது கண்டு அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Sunita Xpress