காவாலா பாடலுக்கு செம்ம Cute ஆக நடனம் ஆடிய தாலாட்டு சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ்..!

சமீபகாலமாக இன்ஸ்டாகிராம், யூடியூப் என எதை திறந்தாலும் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பாடல் தான் ஜெயிலர் படத்தில் இருந்து வெளியான காவலா பாடல். அந்த பாடலுக்கு பலரும் ரீல்ஸ் செய்து வரும் நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பான தாலாட்டு சீரியல் நடிகை ஸ்ருதி ராஜும் Cute ஆக ஆடி ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தாலாட்டு சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை ஸ்ருதி ராஜ். இவர் இதற்கு முன்பாக அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காவாலா பாடலுக்கு செம்ம Cute ஆக நடனம் ஆடிய தாலாட்டு சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ்..! 1

விளம்பரம்

தென்றல் நாடகத்தில் துளசி எனும் கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் ஸ்ருதி. கேரளாவைச் சேர்ந்த இவர் 1995ஆம் ஆண்டு ‘அக்ராஜன்’ என்கிற மலையாள படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். பின்னர் இவர் இளைய தளபதி விஜய் நடிப்பில் மாண்புமிகு மாணவன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். திரைத்துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்த இவருக்கு வெள்ளித்திரை பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. எனவே இவர் சின்னத்திரைக்குள் அடி எடுத்து வைத்தார். தென்றல் நாடகத்தில் தான் முதன்முதலில் நடித்தார். இந்த நாடகம் மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பு பெற்றது.

தொடர்புடையவை  கடை திறப்பு விழாவுக்காக மலேசியா சென்ற பாக்கியலட்சுமி சீரியல் ஹீரோயின் சுசித்ரா.! சுற்றி வளைத்த பொதுமக்கள்.!

காவாலா பாடலுக்கு செம்ம Cute ஆக நடனம் ஆடிய தாலாட்டு சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ்..! 3

விளம்பரம்

சாந்தமான கதாபாத்திரத்தில் இவர் நடித்ததால் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த ஒருவராக இவர் மாறிப் போனார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் தாலாட்டு என்ற சீரியல் ஹீரோயினாக நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோக்களை அடிக்கடி வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். தற்போது ட்ரெண்ட்டிங்கில் இருக்கும் காவலா பாடலுக்கு செம்ம Cute ஆக நடனமாடி இருக்கிறார். லைக்குகளை குவித்து வரும் அந்த வீடியோவை நீங்களும் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video.! 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment