ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த பாரத நாயுடு தற்போது பெண் குழந்தைக்கு தாயாக ஆகியிருக்கிறார். கர்ப்ப காலத்தில் தான் பட்ட கஷ்டங்களையும், பிரசவ நாளன்று தான் பெற்ற வேதனைகளையும் வீடியோவாக எடுத்து அதை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் பாரத நாயுடு. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் இளைஞர்கள் தொடங்கி குடும்ப தலைவிகள் வரை பலருக்கும் ஃபேவரைட் தொடராக இருந்து வந்தது. இந்த சீரியலை பார்க்காதவர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து வீடுகளிலும் இரவு 9 மணிக்கு ஒலித்துக்கொண்டிருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல பலருக்கும் இந்த நாடகம் பார்ப்பதை நிறுத்தி இருந்தனர். அரைத்த மாவையே அரைப்பது, பரிகாரங்கள் செய்வது, எதிரிகளால் பழிவாங்கப்படுவது, சொந்த வீட்டிலேயே எதிரிகள் உருவாவது என்று பிற்போக்குத்தனங்கள் அதிகரிக்க தொடங்கியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் ஒரு கட்டத்தில் பலரும் இந்த சீரியலை பார்ப்பதை நிறுத்தி இருந்தனர். மேலும் இந்த சீரியலின் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த கார்த்திக் விலகிய பின்பு பலரும் சீரியலை பார்ப்பதை நிறுத்தினர். பின்னர் ஒரு வழியாக இந்த சீரியல் முடிவுக்கு வந்தது. இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் பாரத நாயுடு. பின்னர் இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தாலாட்டு சீரியலிலும் நடித்து வந்தார். தாலாட்டு சீரியலில் இருந்து ஒரு கட்டத்தில் காரணமே இல்லாமல் நீக்கப்பட்டார் பாரத நாயுடு. ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த இவர் தேன்மிட்டாய் என்கிற ஒரு படத்தின் மூலமாகத்தான் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்னர் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான அட்ரா மச்சான் விசிலு என்கிற படத்தில் நடித்தார். பின்பு 2017 ஆம் ஆண்டு வெளியான நிரஞ்சனா என்கிற திகில் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த அவருக்கு செம்பருத்தி சீரியல் ஒரு திருப்புமுனையாக அமைந்திருந்தது.

தற்போது எந்த சீரியலிலும் நடிக்காமல் திரைத்துறையில் இருந்து சிறிய பிரேக் எடுத்துக் கொண்டிருக்கிறார் பாரத நாயுடு. அவர் தனது காதலரை திருமணம் செய்து கொண்டிருந்தார். திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தன் கர்ப்பமாக இருந்து செய்தியை அவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருந்தார். தற்போது புதிய வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் கர்ப்பமாக இருக்கும் அவர் மருத்துவமனைக்கு செல்வதற்காக துணிமணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்படுகிறது. அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கின்றனர். கஷ்டப்பட்டு குழந்தை பெற்றுக் கொள்ளும் அவரின் குழந்தையை மருத்துவர்கள் அவரிடம் கொடுக்கின்றனர். அதை வாங்கி முத்தம் கொடுக்கிறார் பாரத நாயுடு. மேலும் குழந்தை கணவர் கைகளுக்கு செல்கிறது. அவரும் ஆசையுடன் வாங்கி முத்தம் கொடுக்கிறார். அந்த அழகிய வீடியோவை அவர் தற்போது வெளியிட்டு இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O