பாரதி கண்ணம்மா சீரியலின் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் மீண்டும் பாரதியை வெண்பா குழப்பி விடுவது போன்ற ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் பாரதி கண்ணம்மா. இது எப்பொழுது முடியும் என்று இந்த நாடகத்தை பார்த்து வந்த ரசிகர்களே கேட்கும் அளவிற்கு கதையை இழுத்து அடித்து வருகின்றனர். ஆனாலும் கடை கதை முடியும் படியாக தெரியவில்லை. ஆனால் அடிக்கடி வெளியிடும் ப்ரோமோக்களை பார்த்தால் கதை விரைவில் முடிவடைந்து விடும் என்பது போலத்தான் தெரிந்தது. ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவை பார்த்தால் இந்த ஜென்மத்தில் இந்த கதை முடிய போவதில்லை என்ற முடிவுக்கு ரசிகர்கள் வந்துவிட்டனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிரபல இதய நோய் நிபுணராக இருப்பவர் பாரதி. இவரது தோழி வெண்பா இவருக்கு குழந்தை பிறக்காது என்று சொல்லி ஏமாற்றி வைத்திருக்கிறார். இரண்டு முறை குழந்தை பாக்கியம் இருக்கிறதா இல்லையா என்று டெஸ்டை எடுக்கும் போது அதை மாற்றி வைத்து விடுவார் வெண்பா. இதனால் தனக்கு குழந்தை பிறக்காது என்று தீர்க்கமாக நம்பிக் கொண்டிருந்த பாரதிக்கு, அவரது மனைவி மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தது. இதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. முதலிலேயே டிஎன்ஏ டெஸ்ட் எடுத்திருந்தால் இது யாருடைய குழந்தை என்பது தெரிய வந்திருக்கும் ஆனால் அதை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார் பாரதி ஒருவழியாக தற்போது டிஎன்ஏ டெஸ்ட்டை எடுத்திருக்கிறார் பாரதி. இதனால் நாடகம் விரைவில் முடியப்போகிறது என்று ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.
ஆனால் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் வெண்பா பாரதியிடம் உனக்கு இரண்டு முறை குழந்தை பேறு டெஸ்ட் எடுத்து பார்த்தபோது குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என்று ரிசல்ட் வந்தது. ஆனால் தற்போது எப்படி இந்த டிஎன்ஏ டெஸ்ட் முடிவுகளை ஒத்துக் கொள்கிறாய், உன்னை நன்றாக ஏமாற்றிவிட்டார்கள் என்று குட்டையை குழப்புகிறார். இதனால் கடுப்பான கண்ணம்மா வெண்பா சரியாகத்தான் கேட்கிறார் பதில் சொல்லுங்கள் என்று பாரதியை பார்த்து கூறுகிறார். பாரதி அதற்கு பதில் சொல்லாமல் குழப்பமான முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறார். இதனால் மீண்டும் கதை பழையபடி முதலில் இருந்து ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! Watch the below video.!
YouTube Video Code Embed Credits: Vijay Television