கண்ணம்மா குடிக்கும் தண்ணீரில் தூக்க மாத்திரையை கலந்த வெண்பா.! நீங்க இன்னும் திருந்தலையா?

வெளியிட்டது

பாரதி கண்ணம்மா சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கண்ணம்மாவிற்கு குடிக்கும் தண்ணீரில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து வெண்பா தனது வில்லத்தனங்களை ஆரம்பித்து இருக்கிறார். இதனால் ஆசிரியராக வேலை பார்த்து வரும் கண்ணம்மா குழந்தைகளை கவனிக்காமல் வகுப்பறையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார். இதனால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. குழந்தைகள் ஒருவர் ஒருவர் தங்களை பயங்கரமாக தாக்கி கொள்கின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலை யாராலும் மறந்துவிட முடியாது. சுமார் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் சமீபத்தில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீசன் 2 எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சீசன் 1 முடிந்த அடுத்த வாரமே சீசன் 2 ஒளிபரப்பாக தொடங்கியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சீசனில் கண்ணம்மாவாக வினுஷா தேவியே நடிக்க, ஹீரோவாக பாரதி கதாபாத்திரத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலின் கதாநாயகன் சிபு சூரியன் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கண்ணம்மா குடிக்கும் தண்ணீரில் தூக்க மாத்திரையை கலந்த வெண்பா.! நீங்க இன்னும் திருந்தலையா? 1

பாரதியின் தாயார் கதாபாத்திரத்தில் சௌந்தர்யாவே மீண்டும் நடித்து வருகிறார். இந்த நாடகம் தொடங்கி சில மாதங்கள் ஆன நிலையிலும் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. எனவே மீண்டும் சீசன் ஒன்னில் வில்லியாக நடித்த ஃபரீனாவை மீண்டும் வெண்பா கதாபாத்திரத்திலேயே களம் இறக்கி இருக்கின்றனர். சௌந்தர்யாவின் அண்ணன் மகள் என்கிற முறையில் உள்ளே என்ட்ரி கொடுக்கிறார் வெண்பா. இவர் பாரதி மீது தனக்கு விருப்பம் இல்லை என்பது போல் காட்டிக் கொண்டாலும் அவருக்கு கண்ணம்மாவை சுத்தமாக பிடிக்கவில்லை. சௌந்தர்யா சொந்தமாக பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். அவரது மகன் பாரதி பொறுப்பில்லாமல் ஊர் சுற்றி வரும் மகனாக இருக்கிறார். இந்த நிலையில் பள்ளியின் பொறுப்புகளை தானே முன் நின்று கவனித்து வருகிறார் சௌந்தர்யா. பாரதிக்கும் கண்ணம்மாவிற்கும் பழக்கம் ஏற்பட, பாரதியின் பரிந்துரையின் பெயரில் கண்ணம்மாவிற்கு பள்ளியிலேயே ஒரு டீச்சர் வேலையை வாங்கிக் கொடுக்கிறார் பாரதி. கண்ணம்மா மீது ஏற்கனவே கோபத்தில் இருக்கும் வெண்பா, கண்ணம்மாவை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று யோசிக்கிறார் .

அந்த சமயத்தில் அவர் குடிக்கும் தண்ணீரில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து அவரை தூங்க வைத்து விடுகிறார். வகுப்பிலேயே கண்ணம்மா தூங்கிவிட்டதால் மாணவர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது. ஒருவர் ஒருவர் தாக்கி கொண்டு மண்டை உடைந்து இரத்தம் வருகிறது. இந்த பிரச்சனை பள்ளியின் நிர்வாகியாக இருக்கும் சௌந்தர்யா வரை செல்கிறது. இவ்வளவு சண்டை நடக்கிறதே உங்கள் கிளாஸ் மிஸ் எங்கே என்று கேட்கிறார் சௌந்தர்யா. உள்ள எட்டிப் பார்க்கும் பொழுது அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார் கண்ணம்மா இதனால் வேலையை விட்டு கண்ணம்மாவை துரத்தி விடுகிறார் சௌந்தர்யா. ஆனால் சௌந்தர்யா நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் கண்ணம்மா விரதம் இருக்கிறார், அதனால் தான் பள்ளியில் தூங்கிவிட்டார் என்ற விஷயம் பாரதிக்கு தெரிய வர, அவர் சௌந்தர்யாவிடம் சென்று கண்ணம்மாவை மீண்டும் பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்