ஜெயிலில் இருந்து வெளியே வந்த கண்ணம்மா.! சீசன் 2வின் இன்றைய ப்ரோமோ வெளியானது.!

வெளியிட்டது

பாரதிகண்ணம்மா சீரியலின் சீசன் 2வின் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. பாரதி கண்ணம்மா சீசன் 2 இன்று இரவு முதல் 9:00 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால் இந்த சீசனின் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி வந்த ஒரு தொடர் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் மலையாளத்தில் எடுக்கப்பட்ட “கருத்த முத்து” என்கிற சீரியலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. கருப்பாக இருக்கும் மருமகளை வெறுத்து ஒதுக்கும் மாமியாருக்கும், அவருடன் இணைந்து வாழ அசைப்படும் மருமகளுக்கும் இடையே நடக்கும் போராட்டமாக இந்த கதை எடுக்கப்பட்டது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல இந்த கதை எங்கெங்கோ சென்று விட்டது. இயக்குனர் கதையை சுவாரசியப்படுத்துகிறேன் என்ற பெயரில் நிலை இழு இழு என இழுத்து விட்டார். மூன்று ஆண்டுகளாக இந்த நாடகம் இழுத்தடிக்கப்பட்டு ஒரு வழியாக கடந்த வாரம் நிறைவடைந்தது. ஒரு வழியாக முடிந்தது என்ற பலரும் எண்ணி இருந்த நிலையில், அடுத்த சீசன் 2 ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜெயிலில் இருந்து வெளியே வந்த கண்ணம்மா.! சீசன் 2வின் இன்றைய ப்ரோமோ வெளியானது.! 1
இந்த நிலையில் சீசன் 2 வின் முதல் ப்ரோமோ வெளியானது. அதில் பாரதி கதாபாத்திரத்தில் சன் டிவியில் ரோஜா சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்த சிபு சூரியன் நடிக்க இருப்பதாகவும் கண்ணம்மாவாக மீண்டும் வினுஷா தேவியே நடிக்க இருப்பதாகவும் ப்ரோமோ வெளியானது. சிலர் இந்த கதாபாத்திரத்திற்கு சிபு சூரியன் சரியான தேர்வாக இருக்க மாட்டார் என்று கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். சிபு சூரியனும் பிரியங்கா நல்காரியும் இணைந்து சன் டிவியில் ரோஜா என்கிற சீரியலில் நடித்து வந்தனர். இந்த சீரியலுக்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருந்து வந்தது. ரோஜா சீரியல் திடீரென முடிவடைந்த நிலையில், இருவரும் இணைந்து ரோஜா பாகம் 2 வில் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக இருவரும் பிரிந்து விட்டனர். பிரியங்கா ஜீ தமிழில் நாடகத்தில் நடிக்க சென்றுவிட்டார். சிபு சூர்யன் விஜய் தொலைக்காட்சியில் பாரதிகண்ணம்மா பாகம் 2 வில் நடிக்க வந்து விட்டார்.

 

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை ஜெயிலில் இருந்து சித்ரா என்ற அடையாளத்துடன் வெளியில் வருகிறார் கண்ணம்மா. ஜெயிலில் இருந்து வந்ததால் வீடு தேடி அலையும் அவருக்கு யாரும் வீடு கொடுக்க மறுக்கிறார்கள். சொந்தகாரர்களே மறுக்கும் நிலையில் அவர் பஸ் ஏறி வேறு ஊருக்கு செல்ல நினைக்கிறார். அப்போது வழி மறிக்கும் உறவினர்கள் நகையை திருடி விட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும் கண்ணம்மாவை சித்ரா என அழைப்பதால் இரட்டை வேடங்களில் கண்ணம்மா நடிக்கிறாரா என்ற குழப்பம் எழுந்துள்ளது. அந்தப் ப்ரோமோ வீடியோவை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்