ஹேமாவை பிரித்து விட வேண்டாம் என்று பாரதியிடம் கை கூப்பி கதறி அழும் லெட்சுமி

வெளியிட்டது

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் பாரதி கண்ணம்மா. இது ஐந்து வருடங்களாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பாரதி கதாபாத்திரத்தில் நடிகர் அருண் பிரசாத்தும்,கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினுஷா தேவியும் நடித்து வருகின்றனர். ஆரம்பத்தில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷிணி நடித்து வந்தார். இவர் குக்கு வித்து கோமாளி நிகழ்ச்சிக்காக இந்த சீரியலில் இருந்து விலகினார். ரோஷிணியின் விலகலுக்கு பின்னர் இந்த நாடகத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் சிறிது தொய்வு ஏற்பட்டது. ஆனால் வினுஷா தேவி போகப்போக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரோஷிணியை அப்படியே பிரதிபலித்தார். எனவே நாடகம் சிறிது சூடு பிடித்தது. ஆனால் கதையை எப்படி கொண்டு செல்வது என்று தெரியாமல் அரைத்த மாவையே அரைத்து வருவதால் ரசிகர்கள் இந்த நாடகத்தை முடிக்கும் படி இயக்குனரிடம் கேட்டு வருகின்றனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

ஹேமாவை பிரித்து விட வேண்டாம் என்று பாரதியிடம் கை கூப்பி கதறி அழும் லெட்சுமி 1

இந்த வாரம் வெளியான ப்ரோமோவில் பாரதியிடம் வளரும் ஹேமாவை கண்ணம்மாவிடம் வளரும் லட்சுமியிடமிருந்து எப்படியாவது பிரித்து விட வேண்டும் என்று பாரதி திட்டமிடுகிறார். அதற்கு ஆரம்ப புள்ளியாக தனது மகள் ஹேமாவும் லட்சுமியும் ஒன்றாக படிக்க கூடாது என்று பாரதி நினைக்கிறார். அதற்காக ஹேமாவை வேறு ஸ்கூலுக்கு மாற்றி விட போவதாக பாரதி கண்ணம்மாவிடம் கூறுகிறார். ஆனால் கண்ணம்மாவோ உங்களால் அந்த இரு குழந்தைகளையும் பிரிக்கவே முடியாது என்று சபதம் எடுக்கிறார். தற்போது ஒரு புதிய ப்ரோமோவில் ஹேமாவை தன்னிடம் இருந்து பிரித்து சென்று விட வேண்டாம் என்று லட்சுமி கைகூப்பி பாரதியிடம் அழுகிறார். ஆனாலும் விடாப்பிடியாக பாரதி ஹேமாவின் டி.சியை வாங்கிவிட்டு வந்துவிடுகிறார்.

வெளியே வந்து பார்த்தபோது ஹேமாவும் லட்சுமி கட்டிப்பிடித்து அழுது கொண்டிருக்கிறனர். இவர்களின் பாசப் போராட்டத்தை பார்த்த பாரதி மனம் மாறி ஹேமாவின் டிசியை கிழித்து விடுகிறார். எப்பொழுதும் நெகட்டிவ் ஆகவும் பழிவாங்குவது போலவும் காண்பித்துக் கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா நாடகத்தை முடித்து விடும் படி இயக்குனருக்கு பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் தனது மகள்கள் லட்சுமி ஹேமாவை பிரிக்க பாரதி நினைக்கவில்லை, எனவே இதை அப்படியே கொண்டு போய் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து ஹேமாவும் லட்சுமியும் தனது மகள்கள் தான் என்றும், கண்ணம்மா மேல் இருக்கும் பழியையும் துடைத்து இருவரும் இணைவது போல் காட்டி சீரியலை முடிக்கலாம் என்றும் ரசிகர்கள் கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர் நீங்களும் அந்த ப்ரோமோவை காண.. Watch the below Video..

YouTube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்