திருமண மலர்கள் தருவாயா பாடலை அப்படியே பாடிய சிவாங்கி மற்றும் பிரியங்கா.!

சூப்பர் சிங்கர் பிரபலங்கள் சிவாங்கியும் பிரியங்காவும் இணைந்து “திருமண மலர்கள் தருவாயா” என்ற பாடலை பாடி தற்போது வெளியிட்டிருக்கின்றனர். இந்த வீடியோ பல லட்சக்கணக்கான மக்களால் பகிரப்பட்டு வருகிறது. நம் அனைவருக்கும் மிகப் பரிட்சயமான இரண்டு பேர்தான் சிவாங்கி மற்றும் பிரியங்கா. பிரியங்கா சூப்பர் சிங்கர் ஜூனியரில் இருந்தே பாட்டு பாடி வருகிறார். ஆனால் இவர் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தான் வெளிச்சத்திற்கு வந்தார்.்இவரின் மெல்லிய குரலால் பல ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக இவர் பாடிய “சின்ன சின்ன வண்ணக்குயில்” பாட்டு மிகப் பிரபலமானது. மேடையில் இவர் ஏறினாலே இந்த பாட்டை பாடுங்கள் என்று அவரிடம் கேட்கும் அளவிற்கு அந்த பாடலை அவர் அவ்வளவு நேர்த்தியாக பாடுவார்.

திருமண மலர்கள் தருவாயா பாடலை அப்படியே பாடிய சிவாங்கி மற்றும் பிரியங்கா.! 1

விளம்பரம்

பல் மருத்துவராக இருக்கும் பிரியங்கா பல திரைப்படங்களிலும் பாட்டு பாடி வருகிறார். மேலும் வெளிநாடு கச்சேரி என்று படு பிஸியாக இருந்து வருகிறார் பிரியங்கா. அவருடன் சேர்ந்து சிவாங்கியும் பல நாடுகளுக்கு சென்று வருகிறார். அந்த வீடியோக்களை சிவாங்கி தனது youtube பக்கத்தில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். சிவாங்கி பற்றி நமக்கு அறிமுகமே தேவையில்லை. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பல மனங்களை கொள்ளை கொண்டவர் சிவாங்கி. இவர் ஆரம்பத்தில் சூப்பர் சிங்கரில் தான் அறிமுகமானார். ஆனால் இவருக்கு பெயரை வாங்கிக் கொடுத்த ஒரு நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சிவாங்கிக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உருவாகி இருக்கின்றனர்.

தொடர்புடையவை  அடேய் பார்ட் டைம் பைத்தியம்.! குளிக்கும் போது மட்டும் எப்படி பைத்தியம் சரி ஆகுது? வச்சி செய்யும் நெட்டிசன்கள்?

திருமண மலர்கள் தருவாயா பாடலை அப்படியே பாடிய சிவாங்கி மற்றும் பிரியங்கா.! 3

விளம்பரம்

தற்போது சிவாங்கி தன்னுடைய youtube பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்து இருந்தார். அந்த வீடியோவில் பிரியங்கா மற்றும் சிவாங்கி இருவரும் இணைந்து திருமணம் மலர்கள் தருவாயா என்கிற பாடலை பாடி இருக்கின்றனர். இருவரும் தங்களுடைய மெல்லிய குரலால் இந்த பாட்டைப் பாடியிருந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். வெளியான சில நிமிடங்களிலேயே பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த வீடியோவை பார்த்திருக்கின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..!! Watch the Below Video..!

விளம்பரம்

 

Youtube Video Code Embed Credits: Sivaangi Krishnakumar

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment