இவ்வளோ வருஷம் எங்கயா போன? இப்ப எங்க இருந்து வந்துச்சு ஞானோதயம்? வெளுத்து வாங்கிய கண்ணம்மா

வெளியிட்டது

தனது தவறை உணர்ந்து கண்ணம்மாவையும், லட்சுமி மற்றும் ஹேமாவை ஏற்றுக் கொள்ள வந்த பாரதியை கண்ணம்மா கேள்விகளால் துளைத்து எடுத்திருக்கிறார் .மேலும் இப்போது எங்கிருந்து உனக்கு ஞானோதயம் வந்தது என்று அவரை தங்களிடம் நெருங்க விடாமல் செய்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாரதி கண்ணம்மா. இந்த தொடருக்கு ரசிகர்களையே மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. சுமார் ஐந்து வருடங்களாக இந்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. வித்தியாசமான கதை அம்சத்துடன் ஆரம்பித்த இந்த கதையை இயக்குனர் தற்போது எங்கெங்கயோ நகர்த்தி சென்று விட்டார். பாரதியின் குழந்தைகள் தான் ஹேமா மற்றும் லட்சுமி என்பதை டிஎன்ஏ டெஸ்ட் மூலமாக அறிந்து கொண்டார் பாரதி. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

இவ்வளோ வருஷம் எங்கயா போன? இப்ப எங்க இருந்து வந்துச்சு ஞானோதயம்? வெளுத்து வாங்கிய கண்ணம்மா 1

டெல்லிக்கு சென்று தனது டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டை வாங்கிவிட்டு சென்னைக்கு வரும் போது தற்கொலைக்கு முயன்று கொண்டிருந்த ஹேமாவிடம் நான்தான் உன்னுடைய தந்தை, நான் தாலி கட்டிய பொண்டாட்டி தான் கண்ணம்மா என்று ஊர் அறிய உண்மைகளை ஒத்துக் கொண்டார். இன்றைய எபிசோடில் என்ன நடக்க இருக்கிறது என்பதை ப்ரோமோவாக வெளியிட்டு இருக்கிறது விஜய் டிவி. அதில் டி.என்.ஏ டெஸ்ட் குறித்த உண்மைகளை கண்ணம்மா மற்றும் அனைவரும் முன்னிலையிலும் ஒத்துக்கொள்கிறார் பாரதி. பின்னர் பாரதியின் தந்தை ஹேமா மற்றும் லட்சுமியை பார்த்து உங்கள் தந்தையிடம் செல்லுங்கள் என்று கூறுகிறார். உடனே தந்தையிடம் செல்லும் ஹேமா மற்றும் லட்சுமியை கண்ணம்மா தடுத்து நிறுத்துகிறார்.

இத்தனை வருடங்களாக இல்லாத அறிவு இப்போது எங்கு இருந்து வந்தது? இந்த ஞானோதயம் எங்கிருந்து வந்தது? என்று பாரதியை சரமாரியாக கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார். பாரதிக்கு இந்த கேள்விகள் நெருடலை ஏற்படுத்துகிறது. பதில் சொல்ல முடியாமல் கையெடுத்து கும்பிட்டு தன்னை மன்னித்து விடுமாறு கேட்டு கதறி அழுகிறார் பாரதி. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! Watch the below video.!

Youtube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்