ராதிகாவுடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்த கோபி.! உள்ளே என்ட்ரி கொடுத்த இனியா, ராமமூர்த்தி.!

பாக்கியலட்சுமி தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் ராதிகாவுடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார் கோபி. அந்த நேரம் பார்த்து சரியாக இனியாவும், ராமமூர்த்தி தாத்தாவும் வீட்டிற்குள்ளே வந்து விடுகிறார்கள். அந்த காமெடியான ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியல் நாளுக்கு நாள் பல ரசிகர்களை பெற்று வருகிறது. இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த தொடராகவும், டிஆர்பியில் முன்னிலை வகிக்கும் தொடராகவும் பாக்கியலட்சுமி இருந்து வருகிறது. இதில் கதாநாயகன் கோபி தற்போது தனது இரண்டாவது மனைவி மற்றும் அவருடைய மகளுடன் வசித்து வருகிறார். தற்போது அவரின் மூத்த மனைவியின் மகள் இனியாவும், கோபியின் அப்பாவும் அவர்களுடனே வந்து வசித்து வருகிறார்கள். கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்.

ராதிகாவுடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்த கோபி.! உள்ளே என்ட்ரி கொடுத்த இனியா, ராமமூர்த்தி.! 1

விளம்பரம்

ராதிகாவை திருமணம் செய்த நாள் முதலே அவர்கள் நிம்மதி இல்லாமல் இருந்து வருகிறார்கள். அவர்களுக்குள் தொடர்ந்து சண்டை சச்சரவு என இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ராதிகாவும் கோபியும் அமர்ந்து கொண்டு ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார்கள். மயூ உள்ளே அறையில் தூங்கிக் கொண்டிருக்கிறார். இதனால் கோபி ராதிகாவை பார்த்து எனக்கு ஒரு முத்தம் கொடு என்று கேட்கிறார். ஆனால் அதற்குள் இனியா வீட்டுக்குள்ளே வருகிறார். அதை பார்த்து ராதிகா கோபியை கீழே தள்ளி விடுகிறார். பின்னர் உள்ளே வரும் இனியா, கீழே படுத்துக் கொண்டு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் அப்பா? என்று கேட்க போன் கீழே விழுந்து விட்டது என்று கூறி மழுப்புகிறார் கோபி.

தொடர்புடையவை  பிக்பாஸ் சுவாரஸ்யமாக இல்லை என்று சொன்ன ரம்யாவை வெளுத்து வாங்கிய தாமரை | BiggBoss Ultimate

ராதிகாவுடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்த கோபி.! உள்ளே என்ட்ரி கொடுத்த இனியா, ராமமூர்த்தி.! 3
கோபியின் இந்த செயலை கவனித்துவிட்ட ராமமூர்த்தி தாத்தா கோபியை பார்த்து கேஷுவலாக ஒரு லுக்கு ஒன்றை விடுகிறார். செம காமெடியாக இருக்கும் இந்த ப்ரோமோவை நீங்களும் காண..! Watch the below video..!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment