பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் நடைபெறும் என்று கமல் அறிவித்திருந்த நிலையில் யார் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி சுமார் 60 நாட்களை நெருங்கி விட்டது. இந்த நிலையில் இன்னும் 13 பேர் களத்தில் இருக்கின்றனர். இதில் இருவர் இருவராக அடுத்தடுத்த வாரங்களில் வெளியேற்றப்படுவார்கள் என்று ரசிகர்கள் ஏற்கனவே கணித்திருந்த நிலையில், கடந்த வார இறுதி நாட்களில் கமல் எபிசோடில் அடுத்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்படுவார்கள் என்று கமலே அறிவித்திருந்தார். இந்த வாரம் பிரபல நட்சத்திரங்கள் போலவே வேடம் அணிந்து ஹவுஸ் மேட்ஸ் நடனம், நாடகம் என்று நடித்துக் காட்டி வருகின்றனர். இந்த சுற்று சுவாரசியமாக இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எப்போதும் சண்டை சச்சரவு என இருக்கும் டாஸ்க்குகளையே மக்கள் அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர். இந்த டாஸ்க் அதிகமாக சண்டையோ சர்ச்சரவோ எதுவுமே வரவில்லை. இன்று வெளியாகியிருக்கும் ப்ரோமோக்களில் நிகழ்ச்சிகள் முடிந்து அனைவருக்கும் விருது வழங்குவது போன்று காட்டப்பட்டுள்ளது. அதில் விக்ரமனுக்கும் மணிக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த வாரம் முழுவதும் எந்த சண்டையுமே இல்லாமல் இருந்து வந்த நிலையில் விக்ரமனும் மணிகண்டனும் தற்போது சண்டை போட்டு வருகின்றனர். இந்த நிலையில் சுவாரஸ்யம் குறைவாக இருந்த இரண்டு நபர்களை இந்த வாரம் எலிமினேஷனில் வெளியேற்ற பிக் பாஸ் குழு திட்டமிட்டு இருக்கிறது. அந்த வகையில் ஆறு பேர் இந்த வாரம் நாமினேஷனில் இருக்கின்றனர். அசீம், ஜனனி, கதிரவன், ஏடிகே, ஆயிஷா, ராம் என ஆறு நபர்கள் நாமினேஷனில் இருக்கிறார்கள்.

இதில் ராம் மற்றும் ஆயிஷா இருவரும் குறைந்த வாக்குகளையே பெற்றிருக்கின்றனர். எனவே இவர்கள் இருவரும் வெளியேற அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இத்தனை நாள் அமைதியாக இருந்து வந்த ராம் தற்போது தான் விளையாட தொடங்கி இருக்கிறார். அவர் இந்த வார வீக்லி டாஸ்க் ரகுவரன் போல மிக அருமையாக நடித்துக் காட்டியிருந்தார். நம் இணையதளத்தில் எடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ வாக்கெடுப்பிலும் ராம் மற்றும் ஆயிஷா இருவரும் குறைந்த வாக்குகளையே பெற்று இருக்கின்றனர். எனவே இருவரும் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பிக்பாஸ் நினைத்தால் இருவரில் ஒருவரை சீக்ரெட் ரோமில் வைக்கவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.!
