விக்ரமன் கண்டிப்பா டைட்டில் ஜெயிப்பாரு.! இதான் காரணம்.! ப்ரியங்காவின் வைரல் பேட்டி.!

பிக்பாஸ் சீசன் 6ல் இவர்தான் வெற்றி பெற வேண்டும் என்று பிரியங்கா தேஷ்பாண்டே பேசியிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. அனைவராலும் மிகவும் விரும்பி பார்க்கப்படும் ஒரு நிகழ்ச்சி என்று சொன்னால் அது பிக்பாஸ் தான். இது ஐந்து சீசன்களை முடித்து தற்போது ஆறாவது சீசன் நடந்து வருகிறது. இந்த சீசனில் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் எட்டு பேர் வெளியேறிவிட, தற்போது 13 போட்டியாளர்களுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற இருப்பதாக கமலஹாசன் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனால் போட்டி நாளுக்கு நாள் கடுமை ஆகி வருகிறது. இந்த வாரம் பிரபல ஸ்டார்கள் போல வேடமணிந்து வீக்லி டாஸ்க் வைக்கப்பட்டிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விக்ரமன் கண்டிப்பா டைட்டில் ஜெயிப்பாரு.! இதான் காரணம்.! ப்ரியங்காவின் வைரல் பேட்டி.! 1

விளம்பரம்

இந்த வாரம் இரண்டு பேர் வெளியேறி விட்டால், மீதம் 11 நபர்கள் மட்டுமே இருப்பார்கள். 40 நாட்கள் மீதமுள்ள நிலையில், அடுத்தடுத்து யார் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. அதேபோல் வீட்டிலிருந்து எலிமினேட் ஆகி வெளியே வரும் பலர் ஷிவின், அசீம், விக்ரமன் ஆகியோர் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தொடர்ந்து பேட்டிகளில் கூறி வருகின்றனர். இதில் அசீம் மற்றும் விக்ரமனுக்கு இடையே பலத்த போட்டி நிலவுகிறது. பலர் அசிமை ஆதரிக்கின்றனர், பலர் விக்ரமனை ஆதரிக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு ஈடுகொடுக்கும் விதமாக திருநங்கை போட்டியாளராக இருக்கும் ஷிவினும் தொடர்ந்து களத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பலரும் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கணிப்பை பலரும் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் பிரபல தொகுப்பாளனியாக இருக்கும் பிரியங்காவும் தனது கணிப்பை கூறியிருக்கிறார்.

தொடர்புடையவை  நீ வாழ்ந்துட்டு இருக்க வாழ்க்கை நான் உனக்கு போட்ட பிச்சை.! ராதிகாவை வெளுத்து வாங்கிய பாக்யா.!

விக்ரமன் கண்டிப்பா டைட்டில் ஜெயிப்பாரு.! இதான் காரணம்.! ப்ரியங்காவின் வைரல் பேட்டி.! 3

விளம்பரம்

அதில் அவர் விக்ரமன் வெற்றி பெற வேண்டும் என்றும், அவர் நேர்மையாக விளையாடிக் கொண்டிருக்கிறார் என்றும் தனது கருத்தை கூறியிருக்கிறார். பிக்பாஸ் சீசன் 5ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே. அதன் பின்னர் இவருக்கு செல்வாக்கு உயர்ந்தது. அந்த சீசனில் இவர் இரண்டாவது இடத்தை பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் விக்ரமன் வெல்ல வேண்டும் அதுவே தனது விருப்பம் என்று பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்..! Watch the Below Video..!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment