கண்ணம்மாவுக்காக அடி வாங்கும் பாரதி.! கண்கலங்கி நிற்கும் கண்ணம்மா.! மனம் மாறுவாளா கண்ணம்மா?

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் 2019ஆம் ஆண்டு முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் பாரதி கண்ணம்மா. இது மலையாளத்தில் எடுக்கப்பட்ட “கருத்தமுத்து” என்கிற தொடரை அடிப்படையாகக் கொண்டு மறு உருவாக்கம் செய்யப்பட்டு “பாரதி கண்ணம்மா” என்கிற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அருண் பிரசாத் பாரதியாகவும், நடிகை வினுஷா தேவி கண்ணமாகவும் நடித்து வருகின்றனர். ஆரம்பத்தில் ரோஷினி ஹரிப்பிரியன் கண்ணம்மாவாக நடித்து வந்தார். பின்னர் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கெடுப்பதற்காக பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகி இருந்தார். பாரதியின் தோழி வெண்பா பாரதியை திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் கண்ணம்மா மீது தேவையில்லாத பழிகளை சுமத்துகிறார். குறிப்பாக பாரதிக்கு குழந்தை பிறக்காது என்று சொல்லி வெண்பா ஏமாற்றி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

கண்ணம்மாவுக்காக அடி வாங்கும் பாரதி.! கண்கலங்கி நிற்கும் கண்ணம்மா.! மனம் மாறுவாளா கண்ணம்மா? 1

ஒரு கட்டத்தில் பாரதிக்கும் கண்ணம்மாவிற்கும் இரட்டை குழந்தைகள் பிறக்கிறது.இத்தனை ஆண்டுகளாக இந்த குழந்தை தன்னுடைய குழந்தை இல்லை என்று பாரதி நம்பி வந்தார். ஆனால் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்த்த பிறகு இந்த குழந்தைகள் தன்னுடையது தான் என்பது பாரதிக்கு தெரிய வருகிறது. ஆனால் கண்ணம்மாவோ பாரதியை விட்டு பிரிந்து ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். கண்ணம்மா மற்றும் குழந்தைகளை தேடி பாரதியும் அந்த கிராமத்திற்கு செல்கிறார். அங்கு மனமாற்றம் நடக்கிறதா? அவர்கள் என்ன மாதிரி பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள்? என்பது குறித்து கதை நகர்ந்து வருகிறது. தற்போது குழந்தை லட்சுமி பாரதியை ஏற்றுக்கொண்டு அவருடன் சேர்ந்து உள்ளது. விரைவில் ஹேமா மற்றும் கண்ணம்மா இருவரும் பாரதியை புரிந்து கொண்டு அவருடன் இணைந்து வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கிராமத்தில் இருக்கும் செல்லப்பாண்டி கண்ணம்மாவிடம் தொடர்ந்து வம்பிழுத்து வருகிறார். கண்ணம்மாவின் பெயரை கெடுப்பதற்காக செல்லப்பாண்டி முயற்சி செய்து வருகிறார். அவரை கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்க வைக்க பல முயற்சிகள் செய்து வரும் நிலையில் தற்போது அவருடன் குஸ்தி போட்டியில் பாரதி ஈடுபட்டுள்ளார். கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்க வைப்பதற்காக பாரதி கடுமையாக அடி வாங்குகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! Watch the below Video.!  

Youtube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்