ராகினியை வைத்தே கோதையின் வீட்டை எழுதி வாங்கிய அர்ஜுன்.! அதிர்ச்சியில் உறைந்த தமிழ்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ராகினியை வைத்து தற்போது அர்ஜுன் கோதையின் வீட்டை எழுதி வாங்கி இருக்கிறார். அந்த ப்ரோமோவை தற்போது விஜய் ததொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. ப்ரோமோவை பார்த்த பலரும் உங்கள் மகன் தமிழ் கஷ்டப்படும் பொழுது அந்த ராகினிக்கும் அர்ஜுனுக்கும் வீட்டை எழுதிக் கொடுத்து இருக்கிறீர்களே இதெல்லாம் உங்களுக்கு நன்றாக இருக்கிறதா என்று சொல்லி கொந்தளித்து வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கோதையின் மூத்த மகனாக இருக்கும் தமிழை கோதையின் மருமகனாக இருக்கும் அர்ஜுன் பழி வாங்குகிறார் கோதை கையாலையே தமிழ் வீட்டை விட்டு விரட்டி அடிக்கப்படுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ராகினியை வைத்தே கோதையின் வீட்டை எழுதி வாங்கிய அர்ஜுன்.! அதிர்ச்சியில் உறைந்த தமிழ்.! 1

விளம்பரம்

தமிழ் தன்னை கத்தியால் குத்த வந்தார் என்ற நாடகமாடி அவரது தாயார் கோதை கையாலேயே தமிழை வீட்டிலிருந்து விரட்டி அடிக்கும்படி செய்து விட்டார் அர்ஜுன். ஆனால் இந்த உண்மை தமிழைத் தவிர வேறு யாருக்கும் தெரியவில்லை. இதை எப்படியாவது குடும்பத்தினரிடம் சொல்லி தமிழ் மீது எந்த தவறும் இல்லை அர்ஜுன் நாடகம் ஆடுகிறான் என்ற உண்மையை தெரிய வைப்பதற்காக பலரும் போராடி வருகின்றனர். சரஸ்வதி, வசு, நமச்சி, நடேசன் ஆகியோர் பல முயற்சி செய்தும் பலனில்லை. கோதை மற்றும் ராகினி இவர்கள் பேச்சை கேட்பதாக தெரியவில்லை. இந்த நிலையில் இருந்து வெளியாகியிருக்கும் தனது மாமியார் மற்றும் குடும்பத்தை மிகவும் அவமானப்படுத்துகிறீர்கள் எனவே எனக்கு அண்ணா நகரில் இருக்கும் நமது வீட்டை எழுதி தாருங்கள் என்று கோபத்துடன் ராகினி கேட்கிறார். அதற்கு கோதையும் சம்மதிக்கிறார்.

தொடர்புடையவை  செந்திலுக்காக பாண்டியன் செய்த செயல்.! மீனாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

ராகினியை வைத்தே கோதையின் வீட்டை எழுதி வாங்கிய அர்ஜுன்.! அதிர்ச்சியில் உறைந்த தமிழ்.! 3

விளம்பரம்

அதே சமயம் புது கம்பெனியை வாங்குவதற்காக பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு தமிழ் மற்றும் சரஸ்வதி ஆகியோர் வந்திருக்கின்றனர். அவர்கள் இருவரின் கண் முன்னாலேயே கோதை ராகினி மற்றும் அர்ஜுனுக்கு அண்ணாநகர் வீட்டை எழுதி வைக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் தற்போது தமிழ் இவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார், அவருக்கு என்று சொந்த வீடு கூட இல்லை, ஆனால் இந்த அர்ஜுனை நம்பி வீட்டையே எழுதி வைக்கிறீர்களே? என்று சொல்லி கமெண்டில் திட்டி தீர்த்து வருகின்றனர். நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment