எதிர்நீச்சல் சீரியலின் நாளைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஆதி குணசேகரன் ஈஸ்வரியை பார்த்து உங்க அப்பா அன்னைக்கு சரி என்று சொல்லி இருந்தால் அந்த ஜீவானந்தத்தை திருமணம் செய்திருப்பாயா? என்று கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி, “எங்க அப்பா மட்டும் சரி என்று சொல்லி இருந்தால் நான் ஜீவானந்தத்தை திருமணம் செய்து கொள்ள சம்மதித்திருப்பேன்” என்று கூறுகிறார். இதை கேட்ட ஆதி குணசேகரன் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் சீரியல். அந்த சீரியலில் தற்போது ஜீவானந்தத்தின் முன்னாள் காதலிதான் ஈஸ்வரி என்கிற உண்மை வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிய வருகிறது. ஈஸ்வரியின் தந்தை சேதுராமன் குணசேகரன் வீட்டிற்கு வந்து ஜீவானந்தம் ஈஸ்வரியை காதலித்த விஷயத்தை போட்டு உடைத்து விடுகிறார். இதனால் மனம் உடைந்து போன குணசேகரன் வீட்டு வாசலில் அமர்ந்திருக்கிறார். அப்போது ஜீவானந்தத்தை பார்த்துவிட்டு வீடு திரும்பும் ஈஸ்வரிக்கும் அவருக்கும் பிரச்சனை வருகிறது.

ஈஸ்வரியின் பிள்ளைகள் அங்கு வந்து நிற்கும்பொழுது குணசேகரன் ஈஸ்வரி பற்றிய தவறாக அவர்களிடத்தில் கூறுகிறார். அப்போது குணசேகனை பிடித்து தள்ளும் ஈஸ்வரி குழந்தைகளிடம் என்னையா பேசிக்கிட்டு இருக்க? என்று சொல்லி கோபத்தில் கத்துகிறார் மேலும் நீ உங்க அப்பா ஓகே சொல்லி இருந்தால் அந்த ஜீவானந்தத்தை திருமணம் செய்திருப்பாயா? என்று கேட்க எங்க அப்பா அன்னைக்கு ஓகே சொல்லி இருந்தால் நான் கண்டிப்பாக திருமணம் செய்து இருப்பேன் என்று சொல்கிறார். இதனால் பேயறைந்தது போல நிற்கிறார் குணசேகரன். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video.!
YouTube Video Embed Code Credits: Sun TV