“பாரதி காதலியே கண்ணம்மா” பாட்டு பாடி பாரதியின் நினைவுகளை மீட்க போராடும் கண்ணம்மா..!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது முடிவடைய இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் பாரதியின் பழைய நினைவுகளை மீட்டு எடுப்பதற்காக கண்ணம்மா போராடிக் கொண்டிருக்கிறார். பாரதிக்கு பழைய நினைவுகள் வரும் பட்சத்தில் இந்த சீரியல் முடிவடையும் என்று தெரிகிறது. மலையாளத்தில் எடுக்கப்பட்ட ஒரு தொடரை அடிப்படையாகக் கொண்டு இந்த சீரியல் எடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த சீரியலின் கதையை பார்த்தோம் என்றால் கறுப்பாக இருக்கும் கண்ணம்மாவை, குழந்தை பிறக்காது என்று ஏமாற்றப்பட்டு வரும் பாரதி திருமணம் செய்து கொள்கிறார். ஆரம்பத்தில் கண்ணம்மா கறுப்பாக இருக்கிறார் என்கிற காரணத்தினால் அவரது மாமியார் அவரை வெறுக்கிறார். இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு கண்ணம்மாவின் தந்தையின் இரண்டாவது மனைவியின் மகள் அஞ்சலியும் பாரதியின் தம்பியை திருமணம் செய்து கொண்டு அதே வீட்டிற்குள் நுழைகிறார். இருவரும் சேர்ந்து கண்ணம்மாவை கொடுமைப்படுத்துகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"பாரதி காதலியே கண்ணம்மா" பாட்டு பாடி பாரதியின் நினைவுகளை மீட்க போராடும் கண்ணம்மா..! 1
பின்னர் உள்ளே வந்த அஞ்சலியும் கண்ணம்மாவின் மாமியார் சௌந்தர்யாவும் சேர்ந்து கொண்டு கண்ணம்மாவை கொடுமைப்படுத்துகின்றனர். இப்படியாகத்தான் இந்த கதை ஆரம்பித்தது. பின்னர் வில்லி வெண்பாவை கதைக்குள் கொண்டு வந்தனர். அவர்தான் பாரதிக்கு குழந்தை பிறக்காது என்று சொல்லி ஏமாற்றி வருகிறார். பின்னர் ஒரு கட்டத்தில் பாரதிக்கு இந்த உண்மைகள் எல்லாம் தெரிய வந்து, கண்ணம்மாவிற்கு பிறந்த இரட்டை குழந்தைகளும் தன் குழந்தைகள் தான் என்கிற விஷயங்களும் தெரிய வருகிறது. ஆனால் இதை நீங்கள் மிகவும் தாமதமாக தெரிந்து கொண்டீர்கள் என்று சொல்லி கண்ணம்மா பாரதியிடம் கோபித்துக் கொண்டு தனது சொந்த ஊருக்கே திரும்பி விடுகிறார். அங்கு செல்லும் பாரதி கண்ணம்மாவை புரிந்து கொள்வதற்காக பல முயற்சிகளில் ஈடுபடுகிறார். ஒரு கட்டத்தில் அங்கு இருக்கும் வில்லனால் தலையில் கடுமையாக தாக்கப்பட்டு பழைய நினைவுகளை இழந்து விடுகிறார் பாரதி.


தற்போது பாரதிக்கு பழைய நினைவுகள் வரவேண்டும் என்றால் மீண்டும் பழைய கண்ணம்மாவாக மாற வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி இருக்கும் நிலையில், கண்ணம்மா பாவாடை தாவணியுடன் பாரதிக்கு பழைய நினைவுகளை கொண்டு வருவதற்காக போராடிக் கொண்டிருக்கிறார். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பாரதி கண்ணம்மா சீரியலின் தலைப்பு பாடலான “பாரதி காதலியே கண்ணம்மா” என்கிற பாடலை பாரதிக்கு பாடி காட்டுகிறார். அப்போது பாரதிக்கு கொஞ்சம் பழைய நினைவுகள் திரும்புவது போல தோன்றுகிறது. இந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விரைவில் பாரதிக்கு பழைய நினைவுகள் அனைத்தும் திரும்பி மீண்டும் கண்ணம்மாவுடன் இணைவது போல சீரியல் முடிக்கப்படும் என்று தெரிகிறது..! நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்