கண்ணம்மா கழுத்தில் தாலி கட்டி, வெண்பா முகத்தில் கரியை பூசிய பாரதி.! ப்ரோமோ உள்ளே.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் தற்போது பாரதிக்கும் கண்ணம்மாவிற்கும் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. தாலி கட்டிய பிறகு தற்போது சௌந்தர்யா கோவிலுக்குள் என்ட்ரி கொடுத்ததால் அவரால் திருமணத்தை நிறுத்த முடியவில்லை. தனது தாயின் பேச்சை மீறி தற்போது கண்ணம்மாவை திருமணம் செய்து கொண்டு வெண்பா உள்ளிட்ட அனைவரும் முகத்திலும் பாரதி கரியை பூசி இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீசன் 2 தற்போது தான் கதை சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. இத்தனை நாள் நண்பர்களாக பழகி வந்த கண்ணம்மாவும் பாரதியும் தற்போது காதல் வரை சென்று திருமணமும் செய்து இருக்கின்றனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்களா பாரதி கண்ணம்மா கழுத்தில் தாலி கட்டுவாரா? என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தற்போது கண்ணம்மாவின் கழுத்தில் பாரதி தாலியை கட்டி தனது மனைவியாக்கி இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கண்ணம்மா கழுத்தில் தாலி கட்டி, வெண்பா முகத்தில் கரியை பூசிய பாரதி.! ப்ரோமோ உள்ளே.! 1
சிறைக் கைதியாக இருக்கும் சித்ரா விடுதலை பெற்று கண்ணம்மாவாக கண்ணம்மாவின் வீட்டிற்குள் நுழைகிறார். அப்போது சித்ராவின் நண்பராக இருக்கும் பாரதி சித்ராவை கண்ணம்மா என்று நம்பி அவருடன் பழகுகிறார். ஒரு கட்டத்தில் தான் கண்ணம்மா கிடையாது தன்னுடைய உண்மையான பெயர் சித்ரா என்று சொல்லி உண்மையை உடைக்கிறார். இருந்தபோதும் பாரதியால் அவரை விட்டுக் கொடுக்க முடியவில்லை, எனவே கண்ணம்மாவை திருமணம் செய்து கொள்ளும் முனைப்பில் பாரதி இருக்கிறார். ஆனால் பாரதியின் தாயாரோ பாரதிக்கும் அவரது அத்தை மகள் வெண்பாவிற்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை நடத்தி வருகிறார். இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தபோதிலும், பாரதிக்கு கண்ணம்மாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் இருந்து வருகிறது. இந்த நிலையில் யாருக்கும் தெரியாமல் கோவிலில் வைத்து கண்ணம்மா கழுத்தில் பாரதி தாலி கட்ட முயற்சி செய்கிறார்.

 

இந்த விஷயத்தை கேள்விப்பட்டு பாரதியின் தாயார் சௌந்தர்யா, வெண்பா, அவரது பெற்றோர்கள் அனைவரும் கோவிலுக்கு மேலே ஓடி வருகின்றனர். ஆனால் அதற்குள் கண்ணம்மாவின் கழுத்தில் பாரதி தாலி கட்டி முடித்திருக்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்