விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ தொடரில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது சரஸ்வதி மயங்கி கீழே விழுந்த நிலையில், அவரை மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். அங்கு மருத்துவர் இல்லை என்பதால் ராகிணியை போன் செய்து அழைத்து பிரசவம் பார்க்க அழைக்கின்றனர். ராகிணியும் பிரசவம் பார்க்கிறார். தமிழுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அர்ஜுனின் மண்டையை அவரது அக்கா கணவர் அடித்து உடைக்கிறார். இதனால் கோமா நிலையில் இருக்கிறார் அர்ஜுன். ஆனால் இதை தவறுதலாக புரிந்து கொள்ளும் ராகிணி தமிழ் அடித்ததால் தான் அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாக கூறி சண்டை போடுகிறார். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ராகிணியின் மாமியார் ராகிணியிடம், “உன்னுடைய கணவனை அடித்து கோமா நிலைக்கு அழைத்துச் சென்றவன் குழந்தையை நீ காப்பாற்ற போகிறாயா? என்று துர்போதனைகளை செய்கிறார்.

மருத்துவமனைக்கு வரும் ராகிணி, சரஸ்வதிக்கு நல்லபடியாக பிரசவம் பார்த்து அவருக்கு பெண் குழந்தை பிறப்பதை உறுதி செய்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television