விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகி வரும் ‘ஆஹா கல்யாணம்’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது மஹாவுக்காக சூர்யா தனியார் ஹோட்டல் ஒன்றில் மிகப்பெரிய பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார். இருவரும் தனியாக சென்று பார்ட்டியை கொண்டாட முடிவெடுத்திருந்த நிலையில், குடும்பம் அனைவரும் கிளம்பி அவர்களுடன் சென்றிருக்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆஹா கல்யாணம் தொடரில் ஆரம்பத்தில் விருப்பமில்லாமல் மஹாவை திருமணம் செய்து கொள்ளும் சூர்யா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அவருடன் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார். ஆனால் சூர்யாவின் தாயாருக்கு இது பிடிக்கவில்லை. அவர் மஹாவை முற்றிலுமாக வெறுக்கிறார். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மஹாவை அழைத்துக் கொண்டு டின்னருக்கு செல்ல சூர்யா முடிவெடுக்கிறார். அதற்காக அவரை கிளம்பி இருக்குமாறு போன் செய்து கூறுகிறார். ஆனால் அதை ஒட்டுக் கேட்கும் சித்ரா வீட்டில் உள்ள அனைவரையும் கிளம்புமாறு கூறுகிறார்.

இந்த நிலையில் வேறு வழியில்லாமல் அனைவரையும் அழைத்துக் கொண்டு சூர்யா டின்னருக்கு செல்கிறார். அங்கு கேக் வெட்டி மஹாவுடன் அவர் பார்ட்டியை கொண்டாடுகிறார். அந்த அழகான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television