பாரதிகண்ணம்மா தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் வீட்டிற்கு வெளியே படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் கண்ணம்மா திடீரென அலறி அடித்துக் கொண்டு கத்திக் கொண்டிருக்கிறார். இதனால் கண்ணம்மாவை கூடாரத்திற்குள்ளே படுக்க வைத்து விட்டு வெளியே வந்த பாரதி கொசுக்கடியில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்து சௌந்தர்யா வெளியில் வேகமாக ஓடி வருகிறார். அப்படி ஒரு ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. பாரதி கண்ணம்மா சீசன் 2 தொடங்கிய நாள் முதல் மிகப்பெரிய அளவிலான வரவேற்பு ஏதும் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது. கதையில் பெரிய அளவில் விறுவிறுப்பு இல்லாத நிலையில், சமீபத்தில் தான் கதை கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க ஆரம்பித்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கதையில் திடீர் திருப்பமாக கண்ணம்மாவும் பாரதியும் திருமணம் செய்து கொண்டனர் வெண்பாவிற்கும் பாரதிக்கும் திருமண நிச்சயம் நடைபெற்ற நிலையில் எதிர்பாராத விதமாக கண்ணம்மாவை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார் பாரதி. இதை சற்றும் எதிர்பார்க்காத சவுந்தர்யா கோபத்தில், பாரதி இனிமேல் மகனே கிடையாது, இனி அவர் என் முகத்திலேயே முழிக்க கூடாது என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். வீட்டிற்கு திரும்பி வந்தபோது பாரதியும் கண்ணம்மாவும் அங்கு வர, உடம்பில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு நீங்கள் இந்த வீட்டிற்குள் வந்தால் கொளுத்தி கொள்வேன் என்று சொல்லி மிரட்டுகிறார். இதனால் கண்ணம்மாவும் பாரதியும் சௌந்தர்யாவின் வீட்டிற்கு வெளியிலேயே ஒரு கூடாரம் ஒன்றை அமைத்து அதில் தங்குகின்றனர். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
அப்போது கண்ணம்மாவின் கனவில் ஏதோ பயங்கரமான நிகழ்வுகள் வந்து போகிறது. இதனால் கதறி அழுது எழுந்து கொள்கிறார் கண்ணம்மா. அப்போது எழுந்த பாரதி கண்ணம்மாவிடம் என்ன ஆனது என்று கேட்க, எனக்கு சிறு வயதில் இருந்தே இந்த பிரச்சனை இருக்கிறது. ஒரு ஆணுடைய நெருக்கத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறுகிறார். பின்னர் பாரதி கொசுக்கடியில் வெளியே போய் தூங்க, கண்ணம்மா கூடாரத்திற்குள் படுத்து உறங்குகிறார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த சௌந்தர்யா மற்றும் குடும்பத்தினர் இங்கு நடக்கும் கூத்துக்களை ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு செல்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்…! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television