ஐயோ அக்கா உங்களுக்கா இப்படி ஒரு நிலைமை.! முல்லையிடம் உண்மைகளை போட்டு உடைத்த மீனா.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் முல்லை மீனாவிடம் சென்று உங்களுக்கும் தனம் அக்கா இருவருக்குள்ளும் என்ன ரகசியம் இருக்கிறது, நீங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக் கொள்கிறீர்களே என்று கேட்கிறார். அப்போது தனம் பற்றிய உண்மைகளை மீனா முல்லையிடம் கூற முல்லை அதிர்ச்சியில் உடைந்து போய் அழுது கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் மூத்த மருமகள் தனம், மூன்றாவது மருமகள் முல்லை, கடைசி மருமகள் ஐஸ்வர்யா என ஒருவர் மாற்றி ஒருவர் கர்ப்பமாக இருக்கின்றனர். விபத்தி ஒன்றில் சிக்கிய முல்லைக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்தது. இதற்கிடையில் கண்ணன் வேலை பார்க்கும் வங்கியில் அவர் லஞ்சம் வாங்கியதாக கூறி அவரை போலீசார் கைது செய்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஐயோ அக்கா உங்களுக்கா இப்படி ஒரு நிலைமை.! முல்லையிடம் உண்மைகளை போட்டு உடைத்த மீனா.! 1
கண்ணன் கைதான அதிர்ச்சி தாங்காமல் தற்போது ஐஸ்வர்யாவிற்கு குழந்தை பிறந்து இருக்கிறது. ஜாமினில் வரும் கண்ணன் தனது குழந்தை வாங்கி நெகிழ்ச்சியுடன் அழுது கொண்டிருக்கிறார். இதற்கிடையில் மூத்த மருமகள் தனத்திற்கு மார்பக புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அவர் வயிற்றில் குழந்தை இருப்பதால் குழந்தையை முதலில் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்து விட்டு உடனடியாக மார்பக புற்றுநோய் சிகிச்சைக்காக அவருக்கு கதிரியக்க சிகிச்சை ஆரம்பிக்க வேண்டும் என்று டாக்டர் அறிவுறுத்துகிறார். ஆனால் இதை இத்தனை நாட்களாக வீட்டில் சொல்லாமல் மறைத்து வைத்திருக்கிறார் தனம். ஆனால் இரண்டாவது மருமகளாக இருக்கும் மீனாவிற்கு மட்டும் இந்த விஷயம் தெரியும்.

விளம்பரம்
தொடர்புடையவை  "நீங்க பாக்க அக்கா தம்பி மாதிரி இருக்கீங்க"!! நேரலையில் அமீர் பாவனியை கலாய்த்த ரசிகர்!! சிரிப்பலையில் பாவனி கடுப்பான அமீர்!!

ஐயோ அக்கா உங்களுக்கா இப்படி ஒரு நிலைமை.! முல்லையிடம் உண்மைகளை போட்டு உடைத்த மீனா.! 3
இந்த நிலையில் தற்போது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முல்லை மீனாவிடம் வந்து, அக்காவுக்கும் உங்களுக்கும் இடையே ஏதோ ரகசியம் இருக்கிறது, அது என்னவென்று எங்களிடம் கூறுங்கள் என கேட்கிறார். அப்போது மீனா தனத்திற்கு மார்பக புற்று நோய் இருக்கும் விஷயத்தை கூற, மனம் உடைந்து போய் அழுகிறார் முல்லை. இப்படியாக வீட்டில் உள்ள அனைவருக்கும் விஷயம் தெரிந்து விரைவில் தனத்திற்கு சிகிச்சை ஆரம்பிப்பது போன்ற கதைக்களம் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment